For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் 9 வருட தனிப்பட்ட பகை.. யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய நிகழ்வு.. இன்று பழிவாங்கப்பட்டது!

அமீரகம்: கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் 9 வருட தனது தனிப்பட்ட பகையை தோனி தீர்த்துக்கொண்டுள்ளார்.

Recommended Video

Rahul Tripathi-க்கு ஆறுதல்.. KKR-க்கு பாராட்டு.. இதான் சார் Dhoni

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

பாண்ட்யாவுக்கு மாற்றாக 3 வீரர்கள்.. முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி! பாண்ட்யாவுக்கு மாற்றாக 3 வீரர்கள்.. முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெயிக்வாட் - டூப்ளசிஸ் ஆகியோர் கொல்கத்தா அணிக்கு தலைவலி கொடுத்தனர். 27 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 32 ரன்களை விளாசினார். இதன் பின்னர் வந்த உத்தப்பா 31 ரன்கள், மொயீன் அலி ஆகியோர் 37 ரன்களை மிகவேகமாக அடித்தனர். மறுமுணையில் தனி ஆளாக நின்று ஆட்டம் காட்டிய டூப்ளசிஸ் கொல்கத்தா அணி பந்துவீச்சை சிதறடித்து 86 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்களில் சிஎஸ்கே 192 ரன்கள் எடுத்தது.

அபார வெற்றி

அபார வெற்றி

இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்கம் சிறப்பாக இருந்தது. அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர்க்ஷ் 32 பந்துகளில் 50 ரன்களும், சுப்மன் கில் 43 பந்துகளில் 51 ரன்களும் விளாசி அசத்தினார். இதனால் முதல் விக்கெட்டிற்கு கொல்கத்தா அணி 91 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதன் பிறகு ஆட்டத்தை சிஎஸ்கேவின் பக்கம் திருப்பினர் தோனி. 90 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த கொல்கத்தா அணி 125 ரன்களுக்குள் 8 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது. இறுதியில் 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4வது முறையாக சிஎஸ்கே கோப்பை வென்றது.

2012 ஐபிஎல் இறுதிப்போட்டி

2012 ஐபிஎல் இறுதிப்போட்டி

இந்நிலையில் 2012ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு தோனி பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. சிஸ்கர்கள் அதிகளவில் பறந்த இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை விளாசி வெற்றி பெற்றுள்ளது.

9 வருட பகை

9 வருட பகை

இதே போல தான் இன்றும் சிஎஸ்கே அணி 3 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 2012ம் ஆண்டை போலவே மீண்டும் இலக்கை விரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதனை மாற்றி அமைத்தார் தோனி. 9 வருட தனிப்பட்ட பகையை தற்போது தீர்த்துக்கொண்டுள்ளார்.

Story first published: Saturday, October 16, 2021, 10:17 [IST]
Other articles published on Oct 16, 2021
English summary
CSK gives a Strong reply for the 2012 IPL final defeat against KKR in 2021 IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X