For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘ரவுடி பேபி’ வார்னர்.. மீண்டும் தொடங்கிய இன்ஸ்டா சேட்டைகள்.. இணையத்தை தெரிக்கவிடும் வீடியோ!

சிட்னி: ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் மனதை வென்ற டேவிட் வார்னர் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் சேட்டைகளை தொடங்கிவிட்டார்.

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோலி 'கேலி' செய்தார்.. திருப்பிக் கொடுத்தேன்.. பட், அவரே நம்பர்.1 - ஆஸி., கேப்டன்கோலி 'கேலி' செய்தார்.. திருப்பிக் கொடுத்தேன்.. பட், அவரே நம்பர்.1 - ஆஸி., கேப்டன்

அந்தவகையில் மாலத்தீவில் தங்கவைக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த மே16ம் தேதி நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் குவாரண்டைனில் உள்ளனர்.

இன்ஸ்டா சேட்டைகள்

இன்ஸ்டா சேட்டைகள்

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கொரோனா காலக்கட்டத்தில் இன்ஸ்டாகிராம் பதிவுகளால் இந்தியர்களின் சூப்பர் ஸ்டாராக மாறினார். இந்திய திரைப்படங்களின் சீன்களையும், பாடல்களையும் அவர் இன்ஸ்டா ரீல்களாக செய்து பதிவிட்டு வந்தது ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக குடும்பத்தினர் அவர் செய்யும் வீடியோக்கள் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரால் அவரின் குறும்பு வீடியோக்கள் வெளியாகாமல் இருந்தன.

ரவுடி பேபி

ரவுடி பேபி

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது சேட்டையை தொடங்கி விட்டார். அவர் இந்த முறை எடுத்துள்ள வீடியோ நடிகர் தனுஷின் 'ரவுடி பேபி' பாடல் ஆகும். இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த பாடலில் தனுஷின் முகத்திற்கு பதிலாக வார்னரின் முகத்தை வைத்து வெளியாகியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வார்னரின் கம்பேக்கிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மோசமான நாட்கள்

மோசமான நாட்கள்

இந்த ஐபிஎல் தொடர் வார்னருக்கு நடந்த சம்பவங்கள் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. வார்னரின் தலைமையில் விளையாடிய ஐதராபாத் அணி மிக மோசமாக செயல்பட்டது. இதனால் டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அவர் ப்ளேயிங் 11ல் இருந்தும் நீக்கப்பட்டு, வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்து சென்று வந்தார். ஒரு சிறந்த கேப்டனை இப்படியா செய்வது என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

நிஜ ஹீரோ

ஆனால் வார்னர் தற்போது தனது பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களின் மனதிற்கு ஆறுதல் கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை என்றாலும், ரசிகர்களுக்காக தனது கவலைகளை மறந்து உற்சாகபடுத்தி வரும் வார்னர் உண்மையில் ரியல் ஹிரோ தான் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Story first published: Wednesday, May 19, 2021, 20:13 [IST]
Other articles published on May 19, 2021
English summary
David Warner's new transformation into actor Dhanush 'Rowdy Baby'
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X