For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அன்று செய்த சின்னத் தவறால்.. இன்று வரை புலம்பித் தவிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ்!

டெல்லி: டெல்லி டேர்டெவில்ஸ் அணி அன்று செய்த ஒரு சிறிய தவறு இன்று வரை அந்த அணியை அலைக்கழித்து வருகிறது... விராத் கோஹ்லியை இழந்ததுதான் டெல்லி செய்த அந்த தவறு.

இன்று உலக ஜாம்பவான் வீரர்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் விராத் கோஹ்லி. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அதே தவறைத்தான் டெல்லி டேர்டெவில்ஸும் அன்று செய்தது. ஆனால் டெல்லி செய்த தவறு, பெங்களூரு அணிக்கு லாபமாகப் போய் விட்டது.

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வரும் கோஹ்லி ஒவ்வொரு சீசனிலும் தன்னை மேம்படுத்தி வந்திருப்பதைப் பார்க்கலாம். வளரும் வீரர் என்ற நிலையிலிருந்து இன்று மாபெரும் சாதனையாளராக மாறி நிற்கிறார். நிச்சயம் கோஹ்லியின் உழைப்பும், கிரிக்கெட் மீதான காதலும் பாராட்டுகுரியவை.

மல்லையா நம்பலை பாஸ்

மல்லையா நம்பலை பாஸ்

கோஹ்லியை ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக எடுத்தபோது அணியின் உரிமையாளரான விஜய் மல்லையாவுக்கு இவர் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லையாம். இந்தப் பையன் என்ன பண்ணப் போறான் என்று அவர் அவநம்பிக்கையாக கூறினாராம்.

19 வயதுக்குட்பட்டோர் பட்டியலிலிருந்து

19 வயதுக்குட்பட்டோர் பட்டியலிலிருந்து

உண்மையில் 19 வயதுக்குட்பட்டோர் பட்டியலில் இருந்துதான் கோஹ்லி, பெங்களூர் ஐபிஎல் அணிக்குத் தேர்வானார். அன்று முதல் தொடர்ந்து பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார். இன்று பெங்களூரு கேப்டனாகவும் இருக்கிறார்.

ஜஸ்ட் மிஸ்!

ஜஸ்ட் மிஸ்!

ஆனால் உண்மையில் டெல்லி அணிக்குப் போயிருக்க வேண்டியவர் இவர். ஆனால் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி கேப்டனாக அப்போது (2008) இருந்த விராத் கோஹ்லியை டெல்லி அணி நிராகரித்து விட்டது. இதனால் அவரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

2 பேர் கட்டாயம்

2 பேர் கட்டாயம்

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி நடந்தபோது அதில் இடம்பெற்ற அணிகள் கண்டிப்பாக தலா 2, 19 வயதுக்குட்பட்டோர் அணி வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டிருந்தது. அப்படி வந்தவர்தான் கோஹ்லி.

சங்க்வானை எடுத்து வீணாய்ப் போனார்கள்

சங்க்வானை எடுத்து வீணாய்ப் போனார்கள்

டெல்லி அணியின் முதல் "பிரிபரன்ஸ்" வேகப் பந்து வீச்சாளர் பிரதீப் சங்க்வான். அவரைத்தான் முதலில் டெல்லி தேர்வு செய்தது. அவரை 50,000 டாலருக்கு ஏலம் எடுத்தது டெல்லி. இதைத் தொடர்ந்து கோஹ்லியை வெறும் 30,000 டாலருக்கு பெங்களூரு ஏலம் எடுத்தது.

3 சீசனில் ஆடி தோல்வி

3 சீசனில் ஆடி தோல்வி

சங்க்வான் 3 சீசன்கள் டெல்லிக்காக ஆடினார். ஆனால் எந்த முத்திரையையும் பதிக்கவில்லை. ஆளே காணாமல் போய் விட்டார். ஆனால் கோஹ்லி சரித்திரமாக மாறி நிற்கிறார்.

சின்னத் தவறு

சின்னத் தவறு

ஒரு சின்னத் தவறு கூட ஒரு நாள் நம் முன்பு வந்து சிரித்து நிற்கும் என்பதற்கு கோஹ்லியைத் தவற விட்ட டெல்லி டேர்டெவில்ஸ்தான் சிறந்த உதாரணம்!

Story first published: Tuesday, May 31, 2016, 17:16 [IST]
Other articles published on May 31, 2016
English summary
With his exceptional power hittings and passion towards game, the Royal Challengers Bangalore (RCB) skipper Virat Kohli is making everyone his fan and taking strides towards greatness with every passing day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X