For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யுவராஜ் சிங் அதிரடி வீண்.. டெல்லி டேர்டெவில்சிடம் தோற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி டெர்டெவில்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

By Karthikeyan

டெல்லி: ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்.

ஐபிஎல் 10வது சீசனின் 40-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. காயம் காரணமாக ஜாகீர்கான் விளையாடாததால் கருண் நாயர் கேப்டனாக செயல்பட்டார்.

 Delhi lose openers after brisk start in run chase against Hyderabad

இதையடுத்து முதலில் விளையாடிய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. வார்னர் 21 பந்தில் 30 ரன்னிலும், தவான் 17 பந்தில் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 24 பந்தில் 24 ரன்கள் சேர்த்தார்.

4-வது வீரராக களம் இறங்கிய யுவராஜ் சிங் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருடன் ஹென்றிக்ஸ் 18 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி சார்பில் ரபாடா 4 ஓவரில் 59 ரன்கள் வாரி வழங்கினார்.

இதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு சாம்சன், நாயர் ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கினர். சாம்சன் 24, நாயர் 39 ரன்கள் சேர்த்து அவுட்டாகினர். அடுத்து வந்த ரிஷப் பந்த் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்கள் சேர்த்து அவுட்டாகினர். ஆன்டர்சன் 24 பந்தில் 41 ரன்னும், மோரீஸ் 7 பந்தில் 15 ரன்னும் சேர்த்தனர். இதனால் டெல்லி அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, May 3, 2017, 0:11 [IST]
Other articles published on May 3, 2017
English summary
Delhi Daredevils' stand-in captain Karun Nair won the toss and elected to chase against Sunrisers Hyderabad in the ongoing Indian Premier League (IPL) 2017 here on Tuesday 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X