For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி vs காவ்யா.. ஐபிஎல் ஏலத்தில் ஒரே திட்டம்.. ஒரு வீரருக்காக கடும் போராட்டம்.. அப்படி என்ன ஸ்பெஷல்

கொச்சி: ஐபிஎல் மினி ஏலத்திற்காக தோனி மற்றும் காவ்யா மாறன் ஒரே திட்டத்தை போட்டுள்ளதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து 10 அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்த வியூகங்களை வகுத்து வருகிறது.

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு செல்லக்கூடிய வீரர்கள்.. ஒரே நாளில் மாற போகும் வீரர்கள் வாழ்க்கை ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு செல்லக்கூடிய வீரர்கள்.. ஒரே நாளில் மாற போகும் வீரர்கள் வாழ்க்கை

சுவார்ஸ்ய சம்பவம்

சுவார்ஸ்ய சம்பவம்

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் ஆகிய இருவருமே ஒரே மாதிரியான திட்டத்தை போட்டுள்ளதால் ஏலத்தின் போது கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் ஆல்ரவுண்டர்களின் தேவை அதிகரித்து தான் எனக்கூற வேண்டும்.

ஐதராபாத் திட்டம்

ஐதராபாத் திட்டம்

ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், நிகோலஸ் பூரண் போன்ற பெரிய வீரர்களை விடுவித்து, இருப்பதிலேயே அதிக தொகையை (ரூ. 42.2 கோடி) வைத்துள்ளது.

அந்த அணியின் பேட்டிங் ஆர்டரில் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மர்க்ரம், வாஷிடங்டன் சுந்தர் என மிடில் ஆர்டர் வரை சிறப்பாக உள்ளது. ஃபினிஷராக அப்துல் சமாத் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் லோயர் ஆர்டரில் ஆடும் ஆல்ரவுண்டர் தான் இல்லை.

யாருக்கு குறி

யாருக்கு குறி

எனவே அந்த இடத்தை நிரப்புவதற்காக இங்கிலாந்து அணியின் சாம் கரணுக்கு குறி வைத்துள்ளது. இவர் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை பெற்றார். மேலும் சாம் கரணுக்கு வயது குறைவு என்பதால் நீண்ட காலத்திற்கு பயன்படுவார்.

தோனி வியூகம்

தோனி வியூகம்

தோனியும் சாம் கரணுக்காக பெரும் தொகையை இறக்க திட்டமிட்டுள்ளார். டுவைன் பிராவோ ஓய்வு பெற்றுள்ளதால், அவரின் இடத்தை நிரப்ப நீண்ட கால வீரராக சாம் கரண் தேவை. ஏற்கனவே அவர் இரண்டு சீசன்களில் சிஎஸ்கேவுக்காக விளையாடி இருப்பதால், அணி வியூகங்களை நன்கு அறிந்தவர். எனவே அவரை ஏலம் எடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தோனி கூறியிருப்பதாக தெரிகிறது.

வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

ஐதராபாத் அணியில் காவ்யா மாறனின் ஏலம் முறையை பார்ப்பதற்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. இதே போல சிஎஸ்கேவும் பெரும் முயற்சிகளில் ஈடுபடும் என்பதால் தோனி vs காவ்யா மாறன் என்ற போரில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, December 20, 2022, 12:08 [IST]
Other articles published on Dec 20, 2022
English summary
Reports says MS Dhoni and Kavya maran makes a same strategy for IPL 2023 mini auction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X