For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி ஒழுங்கா ஆடல.. அதான் டீம்ல இருந்து தூக்கிட்டாங்க.. பட்டென்று உண்மையை பேசிய கங்குலி

கொல்கத்தா : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தோனியை டி20 அணியில் இருந்து நீக்கியது குறித்து பேசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் ஆடும் இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை.

தோனியை கிட்டத்தட்ட டி20 அணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி விட்டதாக சில தகவல்கள் வெளிவந்தன. எனினும், ஒருநாள் அணியில் தோனி 2019 உலகக்கோப்பை வரை ஆடுவார் என்ற செய்தி வந்தது.

பெரிய ஆச்சரியமாக இல்லை

பெரிய ஆச்சரியமாக இல்லை

இதை பற்றி கங்குலியிடம் கேட்ட போது, "தோனியை டி20 அணியில் இருந்து நீக்கியது எனக்கு பெரிய ஆச்சரியமாக இல்லை. அவருடைய செயல்பாடுகள் சரியாக இல்லை. 2020 டி20 உலகக்கோப்பை வரை தோனி ஆடுவதும் சந்தேகமே. அதனால் தான் நல்ல பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட்டுக்கு தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்" என கூறினார்.

இடைவெளி அதிகம்

இடைவெளி அதிகம்

தோனி ஒருநாள் போட்டிகள் உலகக்கோப்பை வரை ஆடுவார் என தகவல்கள் வருவதை பற்றியும் கங்குலி பேசியுள்ளார். "இதில் ஒரு பிரச்சனை உள்ளது. தேர்வாளர்கள் தோனியை 2019 உலகக்கோப்பை வரை அணியில் வைத்திருக்கப் போகிறார்கள் என்றால் அவருக்கு தேவையான போட்டிகளை வழங்க வேண்டும். அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் உள்ளூர் போட்டிகளில் ஆட மாட்டார். அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசீலாந்து தொடரில் தான் ஆடுவார். கிரிக்கெட்டில் இது பெரிய இடைவெளி" என கூறினார்.

உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும்

உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும்

மேலும், "தேர்வாளர்கள் தோனியிடம் பேசி ரஞ்சி அணியில் அவரை ஆட வைக்க வேண்டும். அப்போது தான் அவர் (கிரிக்கெட்டோடு) தொடர்பில் இருப்பார். மேலும், தன் பார்மையும் மீட்டுக் கொள்வார். நீங்கள் என்ன தான் பெரிய வீரராக இல்லாவிட்டாலும், தொடர்ந்து ஆடாவிட்டால் உங்கள் தொடர்பு விட்டுப் போய் விடும்" என கங்குலி கூறினார்.

தோனிக்கு அழுத்தம் ஏற்படும்

தோனிக்கு அழுத்தம் ஏற்படும்

கங்குலியின் பேச்சில் இருந்து ஒரு விஷயம் தெரிகிறது. தோனி ஆஸ்திரேலியா தொடரில் ரன் குவிக்கவிட்டால் பல மட்டத்திலும் இருந்து அவருக்கு அழுத்தம் அதிகரிக்கும். முக்கியமாக, அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

Story first published: Friday, November 2, 2018, 18:49 [IST]
Other articles published on Nov 2, 2018
English summary
Dhoni exclusion is not a surprise says Sourav Ganguly. Dhoni has been removed from the T20 squad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X