For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காலில் விழுந்த ஜடேஜாவை பேட்டால் அடித்த தல தோனி.. ஏன்? எதுக்குன்னு தெரிஞ்சா ஷாக்காய்டுவீங்க

ஜெய்பூர்:ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிக்சர் அடித்த ஜடேஜாவை, தல தோனி மட்டையால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐபிஎல் தொடரின் 25வது போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

அதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களை குவித்தார். பட்லர் 23 ரன்களை குவித்தார்.

யாருக்கு வரும் இந்த மனசு.. எல்லா புகழும் ராஜஸ்தானுக்கே... இதுதான் நம்ம தல யாருக்கு வரும் இந்த மனசு.. எல்லா புகழும் ராஜஸ்தானுக்கே... இதுதான் நம்ம தல

சென்னை வெற்றி

சென்னை வெற்றி

பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தல தோனி 58 ரன்கள் குவித்தார். ராயுடு 57 ரன்கள் எடுத்தார்.

சிக்சர் அடித்து அபாரம்

சிக்சர் அடித்து அபாரம்

கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் நோபால் விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது தனி விவகாரம்.

கீழே விழுந்த ஜடேஜா

கீழே விழுந்த ஜடேஜா

போட்டியின் போது கடைசி ஓவரை எதிர்கொண்ட ஜடேஜா முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார். அப்போது அரங்கமே அதிர்ந்தது. சிக்ஸ் அடித்த ஜடேஜா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

ஜடேஜா ஆசீர்வாதம்

ஜடேஜா ஆசீர்வாதம்

அப்போது அவரை தூக்குவதற்காக ஜடேஜாவை நோக்கி நடந்து சென்றார் தல தோனி. அப்போது தோனியின் காலில் ஆசீர்வாதம் வாங்குவது போன்று சாஷ்டாங்கமாக ஜடேஜா வணங்கினார்.

அடித்தார் தல தோனி

அடித்தார் தல தோனி

அப்போது தோனி வழக்கம் சிரித்துக்கொண்டே அவரை பேட்டால் அடித்தார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் கணக்கு, வழக்கில்லாமல் வைரலாகி இருக்கிறது. தோனியை அன்பை பாருங்கள்... அவரின் பண்பையும், பாசத்தையும் பாருங்கள் என ரசிகர்கள் உருகி தள்ளிவிட்டனர்.

Story first published: Friday, April 12, 2019, 20:56 [IST]
Other articles published on Apr 12, 2019
English summary
Dhoni Hits Ravindra Jadeja On The Head With His Bat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X