நான் பார்த்த கேப்டன்களில் டோணி தான் பெஸ்ட்: சச்சின்

Written By: Staff

மும்பை: நான் இதுவரை பார்த்த இந்திய அணி கேப்டன்களில் டோணி தான் சிறந்த கேப்டன் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கர் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் உள்ளார். அவர் இதுவரை 6 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார். எனினும், டோணி தலைமையிலான இந்திய அணி தான் சச்சினின் நீண்ட கால கனவான கிரிக்கெட் உலக்க் கோப்பையை வென்றது.

இது குறித்து சச்சின் கூறியதாவது,

இதுவரை நான் பார்த்த இந்திய கேப்டன்களில் டோணி தான் மிகச் சிறந்தவர். அவர் எப்பொழுதுமே விழிப்புடன் இருப்பார். அவர் நிலைமையை ஆராய்ந்து, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்.

அவர் எப்பொழுதுமே பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் மூத்த விளையாட்டு வீரர்களுடன் தனித்தனியே அடிக்கடி ஆலோசனை நடத்துவார்.

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் எந்த நிலையிலும் அமைதியாக இருப்பார் என்றார்./p>

Story first published: Monday, April 4, 2011, 15:49 [IST]
Other articles published on Apr 4, 2011

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற