For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் 33 ரன்களே தேவை.... புதிய சாதனைக்கு கேப்டன் கூல் தோனி தயார்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடர் துவங்க உள்ளது. இதில் 33 ரன்களை எடுத்தால், 10 ஆயிரம் ரன்களை கடக்கும் புதிய மைல்கல்லை தோனி எட்டுவார்.

Recommended Video

சாதனைக்கு இன்னும் 33 ரன்களே தேவை...தோனி தயார்!- வீடியோ

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடர் துவங்க உள்ளது. இதில் 33 ரன்கள் எடுத்தால், ஒருதினப் போட்டிகளில், 10 ஆயிரம் ரன்கள் கடந்த 4வது இந்தியர், 12வது வீரர் என்ற பெருமையை கேப்டன் கூல் தோனி பெறுவார்.

இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இதில் முதலில் நடந்த டி-20 போட்டித் தொடரில் 2-1 என தொடரை இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து மூன்று ஒருதினப் போட்டிகள் கொண்ட தொடர் துவங்க உள்ளது. நாட்டிங்காமில் 12ம் தேதி மாலை 5 மணிக்கு முதல் போட்டி நடக்கிறது. இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. மூன்றாவது போட்டி லீட்ஸில் 17ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது.

318 ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ள கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி 9,967 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 33 ரன்கள் எடுத்தால், 10 ஆயிரம் ரன்களை கடப்பார்.

புதிய சாதனை

புதிய சாதனை

இதுவரை 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் மட்டுமே, ஒருதினப் போட்டிகளில், 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளனர். இந்த மைல்கல்லை எட்டுவதற்கு தோனிக்கு மேலும் 33 ரன்கள் மட்டுமே தேவை. 50க்கும் மேற்பட்ட சராசரியுடன், 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரராகவும் தோனி விளங்குவார்.

நெருங்க முடியாத சச்சின்

நெருங்க முடியாத சச்சின்

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தான், 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரராவார். அவர் 463 போட்டிகளில், 18,426 ரன்களை எடுத்துள்ளார். வங்கப் புலி சவுரவ் கங்குலி 311 போட்டிகளில் 11,363 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிட் 344 போட்டிகளில், 10,889 ரன்கள் எடுத்துள்ளார்.

10 ஆயிரம் ரன் குவித்தவர்கள்

10 ஆயிரம் ரன் குவித்தவர்கள்

இலங்கையின் குமார் சங்கக்காரா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் சனத் ஜெயசூர்யா, இலங்கையின் மகேல ஜெயவர்த்தனே, பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக், தென்னாப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா, இலங்கையின் திலகரத்னே தில்ஷான் ஆகியோர் மட்டுமே இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர்.

சுரேஷ் ரெய்னாவும் தயார்

சுரேஷ் ரெய்னாவும் தயார்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருதினப் போட்டியிலேயே இந்த புதிய மைல்கல்லை தோனி எட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். தினேஷ் கார்த்திக் மேலும் 4 ரன்கள் எடுத்தால், 1500 ரன்களை கடப்பார். 8000 ரன்களை கடப்பதற்கு சுரேஷ் ரெய்னாவுக்கு 60 ரன்கள் தேவை. அவர்களுக்கும் இந்தத் தொடரிலேயே இந்த சாதனையை எட்ட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, July 11, 2018, 10:05 [IST]
Other articles published on Jul 11, 2018
English summary
MS Dhoni needs 33 runs to cross 10,000 odi runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X