மயில்வாகனம்.. இந்தியா டோணி வசம் ரொம்ப பத்திரமா இருக்குன்னு சொல்லு!

Posted By: Staff

டெல்லி: பத்மபூஷண் விருது பெற உள்ள மகேந்திர சிங் டோணியை, கேப்டன் கூல், தல என்று பல செல்லப் பெயர்கள் வைத்து அழைப்பதற்கு காரணம், அவருடைய எளிமை, சுலபமாக பழகக் கூடியவர் என்பதாகும்.

விமான நிலையத்தில் படுத்து தூங்கியதோடு, மைதானத்தில் படுத்து ஆச்சரியப்படுத்தியவர் டோணி. பெரிய பந்தா இல்லாதவர். பழைய டீக்கடை நண்பரை சந்தித்து பேசுவது என, சகஜமாக பழகக் கூடியவர்.

Dhoni praised

சரி எதுக்கு இவ்வளவு பில்டப் என்று நீங்கள் கேட்கலாம். ஓவர் டூ

தென்னாப்பிரிக்காவின் பறக்கும் வீரர் ஜான்டி ரோட்ஸ்.

“இரண்டு மாதங்களாக என்னுடன் இந்தியாவில் இருந்த என்னுடைய மகள் இந்தியா மற்றும் மகன் நாதன் ஜான் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றனர். விமானத்தில், டோணியுடன் அவர்கள் பயணம் செய்கின்றனர். அவர்கள் சேப் ஹாண்டில் உள்ளனர். அதனால் பயமில்லை.

தென்னாப்பிரிக்காவில் எப்படி விளையாட வேண்டும் என்று அவர்கள் டோணிக்கு சொல்லிக் கொடுத்தனர். எனக்கு தெரியும் என்று அவர் அவர்களுக்கு பதிளித்துள்ளார். தன்யவாத் டோணி”

இதை ஜான்டி ரோட்ஸ் டுவிட்டரில் பதிவிட்டார். அதற்கு பலரும் பாராட்டி பதில் அளித்து வருகின்றனர். உங்கள் மகள் இந்தியா மட்டுமல்ல, எங்கள் இந்தியாவும், டோணியின் சேப் ஹாண்டில் உள்ளது என்று பலர் குறிப்பிட்டுள்ளனர்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dhoni praised by Rhodes for safe hands
Story first published: Friday, January 26, 2018, 15:08 [IST]
Other articles published on Jan 26, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற