For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங் செய்யாமல் மைதானத்தில் குப்புறபடுத்துவிட்ட டோணி.. ஸ்டன் ஆன ரசிகர்கள்!

By Veera Kumar

கொழும்பு: இந்தியாவிடம் தோற்கும் நிலை வந்ததும் கோபப்பட்டு மைதானத்திற்குள் பாட்டில்களை வீசினர் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள். அப்போது அவர்களை கூல் செய்ய டோணி குப்புறப்படுத்துவிட்டார்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துவிளையாடி வருகிறது. முதலில் நிறைவடைந்த 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை எளிதில் வென்று வொய்ட் வாஷ் செய்துத இந்தியா.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

3வது ஒருநாள் போட்டி

3வது ஒருநாள் போட்டி

முதல் இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், பல்லக்கலேயில் நேற்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை 217 ரன்களை மட்டுமே சேர்த்தது. பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

டோணி அரை சதம்

டோணி அரை சதம்

2வது பேட்டிங் செய்த இந்திய அணி முதலில் சற்று தடுமஆறியது. ஆனால் ரோகித் ஷர்மா சதம் விளாசி நங்கூரம்போட்டார். முக்கிய கட்டத்தில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் டோணி அரை சதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம், இந்தியா ஒருநாள் தொடரையும் வென்றது.

ரசிகர்கள் கோபம்

வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே சேர்க்க வேண்டிய நிலை இருந்தபோது, இலங்கை ரசிகர்கள் கோபமடைந்தனர். இந்தியாவிடம், அடுத்தடுத்து இலங்கை தொடர்ந்து தோற்பதால் கோபமடைந்த அவர்கள் வாட்டர் பாட்டில்களை மைதானத்திற்குள் வீசினர். இதனால் அச்சமடைந்து, பவுண்டரி எல்லையில் நின்ற இலங்கை வீரர்கள் நடு

மைதானத்திற்குள் வந்தனர். இதனால் ஆட்டம் தடைபட்டது.

குப்புற படுத்த டோணி

சுமார் அரை மணி நேரம் ஆட்டம் தடைபட்ட நிலையில், களத்தில் நின்ற டோணி, பிட்ச் அருகே குப்புற படுத்துவிட்டார். நீங்கள் பாட்டில் வீசுவதை நிறுத்தும்வரை நான் படுத்தே இருப்பேன் என்று கூறுவதை போல செய்தார் டோணி. இதை பார்த்த வர்ணனையாளர்கள் சிரித்துவிட்டனர். நிலைமையை கூல் செய்வது டோணிக்கு கை வந்த கலை என அவர்கள் கூறினர். டோணி ஒரு ரெப்ரிட்ஜிரேட்டர் போல நிலைமையை கூல் செய்கிறார் என்றவர்.

படுத்தே விட்டாரய்யா

படுத்தே விட்டாரய்யா

இதனிடையே நெட்டிசன்களோ, நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் பிட்சில் கவிழ்ந்து படுத்துவிடும் போட்டோவை பயன்படுத்தி நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி வருகிறார்கள். "ஒன்னு தூங்குற, இல்ல தூர்வாருற.." என்று கேப்ஷன் போட்டு சிரித்து மகிழ்கிறார்கள் நெட்டிசன்கள்.

Story first published: Monday, August 28, 2017, 17:33 [IST]
Other articles published on Aug 28, 2017
English summary
Once again the definition of calm. Dhoni walks into a tense situation and defuses it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X