For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final: ஒரு முடிவோடு கமெண்ட்ரி.. தினேஷ் கார்த்திக் சேட்டைகள்.. இந்திய அளவில் டிரெண்டிங்

சவுத்தாம்ப்டன்: ஒருவழியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்கிய நிலையில், தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருக்கிறார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

நேற்றைய முதல் நாள் ஆட்டம் முற்றிலுமாக மழையால் பாதிக்கப்பட, இன்று போட்டி எந்தவித சிக்கலும் இன்றி தொடங்கியது.

 லெஃப்ட் ஹேன்ட் டீல்

லெஃப்ட் ஹேன்ட் டீல்

இந்த நிலையில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் குறித்து ட்விட்டரில் பலரும் சிலாகித்து பேசி வருகின்றனர். தினேஷ் கார்த்திக் என்றாலே, அவரது பேட்டிங்கை விட, சமீபகாலமாக நம் மனதுக்கு நினைவுக்கு வருவது அவரது லெஃப்ட் ஹேன்ட் டீலிங் கமெண்ட்ரி தான். ஒரு பேட்ஸ்மேனாக அவர் வைரல் ஆனதை விட, மிக குறுகிய காலத்தில் ஒரு வர்ணனையாளராக தனது "நறுக், சுருக்" பன்ச்களால் அடிக்கடி வைரலாகி வருகிறார்.

 நாசர் ஹுசைன்

நாசர் ஹுசைன்

அந்த வகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வர்ணனை செய்து வரும் தினேஷ், போட்டி தொடக்கி முழுதாய் அரை பொழுது கூட ஆகவில்லை. அதற்குள் மனிதர் வைரல் ஆகிவிட்டார். அப்படி என்ன பண்ணிருக்காப்ல என்று நோண்டிப் பார்த்தால், இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைனை சம்பவம் செய்திருக்கிறார்.

 நேர் எதிரான வீரர்

நேர் எதிரான வீரர்

நாசர் ஹுசைனுடன் இணைந்து தினேஷ் கார்த்திக் கமெண்ட்ரி செய்த்திருக்கிறார். அப்போது நாசர், "ரோஹித் ஷர்மா ஷார்ட் பந்தை அடிப்பதில் சிறந்தவர். சூழலுக்கு எதிராக அவர் தனது கால்களை நன்கு பயன்படுத்துகிறார். இது அவரது நேர்மறையான எண்ணத்தை காட்டுகிறது" என்று சொல்ல, டக்கென நம்ம தினேஷ் கார்த்திக்கோ, "ஆமாம், அப்படியே உங்களுக்கு நேர் எதிரான வீரர்" என்று சொல்லியிருக்கிறார். ஆனால், இது எந்தளவுக்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

 அதிக ஸ்கோர்

அதிக ஸ்கோர்

அதுமட்டுமல்ல, அவர் நியூசிலாந்தின் பவுலிங்கை குறிப்பிடும் விதமாக, "2019 உலகக் கோப்பையில், நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில், முதல் 6 ஓவரில் எடுத்த ஸ்கோரை விட, இந்திய அணி இப்போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளது" என்று தினேஷ் கார்த்திக் கூற, ஏக வைரல் ஆகி வருகிறது அவரது நச் கமெண்ட்ரி பன்ச்கள்.

Story first published: Saturday, June 19, 2021, 20:21 [IST]
Other articles published on Jun 19, 2021
English summary
Dinesh karthik commentary box wtc final - தினேஷ் கார்த்திக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X