For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம அடி வாங்கிய வெ.இண்டீஸ்.. படுமோசமான தோல்விக்கு இதுதான் காரணம்.. புட்டுபுட்டு வைத்த விமர்சகர்கள்!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1 - 2 என்ற கணக்கில் இழந்தது.

Recommended Video

ENG vs WI : Reasons for the loss of West Indies

முதல் போட்டியில் போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது போட்டியில் சில தவறான முடிவுகளை எடுத்து தோல்வி அடைந்தது.

மூன்றாவது போட்டியிலும் அதே தவறுகளை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை இழந்து தோல்வி அடைந்தது.

மரத்துல ஏறி இயற்கையை ரசிச்சதெல்லாம்... விராட் கோலி பரவசம் மரத்துல ஏறி இயற்கையை ரசிச்சதெல்லாம்... விராட் கோலி பரவசம்

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து அபார வெற்றி

அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 58 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 37.1 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுவது டாஸ் முடிவு தான். கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ஒரே மைதானத்தில் தான் நடைபெற்றது. இரண்டாவது டெஸ்டில் முதலில் பந்துவீசி தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது போட்டியில் அந்த அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருக்கலாம்.

தவறான திட்டம்

தவறான திட்டம்

ஆனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த முடிவு தான் தவறாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தன் பந்துவீச்சை பலத்தை நம்பியதால் இவ்வாறு முடிவு செய்து இருக்கலாம். எனினும், அந்த திட்டம் பலனளிக்கவில்லை.

ரக்கீம் கார்ன்வால்

ரக்கீம் கார்ன்வால்

மூன்றாவது டெஸ்டில் வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப்புக்கு பதில் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரக்கீம் கார்ன்வால் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பேட்டிங்கிலும் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

இங்கிலாந்து செய்த மாற்றம்

இங்கிலாந்து செய்த மாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்த முடிவுக்கு மாறாக செயல்பட்டது இங்கிலாந்து அணி. மூன்றாவது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லலாம் என்ற நிலையில் இளம் பந்துவீச்சாளர் சாம் கர்ரனை நீக்கி விட்டு அனுபவ பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை அணியில் சேர்த்தது.

இங்கிலாந்து பந்துவீச்சு திட்டம்

இங்கிலாந்து பந்துவீச்சு திட்டம்

மேலும், சுழற் பந்துவீச்சாளர் டாம் பெஸ் அணியில் இடம் பெற்ற போதும் அவருக்கு ஒரு ஓவர் கூட அளிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி ரக்கீம் கார்ன்வால், ராஸ்டன் சேஸ் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி ஏமாற்றத்தை சந்தித்தது.

நம்பிக்கை இழந்த வெ.இண்டீஸ்

நம்பிக்கை இழந்த வெ.இண்டீஸ்

இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராடு அதிரடியாக விக்கெட் வேட்டை நடத்திய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் நம்பிக்கை இழந்து இருந்தது. அதன் காரணமாகவே இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் 200 ரன்களை கூட அந்த அணியால் தாண்ட முடியவில்லை.

முக்கிய தவறு

முக்கிய தவறு

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியில் மாறுதலை சந்தித்து இருக்கக் கூடும். இங்கிலாந்து மண்ணில் முதலில் பந்துவீசும் அணி வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையில் இரண்டு முறை அதே முடிவை எடுத்தது தான் வெஸ்ட் இண்டீஸ் செய்த முக்கிய தவறாக பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, July 29, 2020, 11:03 [IST]
Other articles published on Jul 29, 2020
English summary
ENG vs WI : Here is the reason for the loss of West Indies against England in the three match test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X