For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய வீரர்களுக்கு அனுபவமே இல்லை... முதல் சர்வதேச போட்டி... 3வது டெஸ்ட் குறித்து புலம்பும் புஜாரா

அகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து மோதும் 3வது போட்டியின் பிட்ச் நிலைமை குறித்து வீரர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொய்திரா ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால் கடும் போட்டி நிலவுகிறது.

34 வருடங்களாக முறியடிக்க முடியாத சாதனை... 2வது டெஸ்டில் முறியடித்த கோலி தலைமையிலான இந்திய அணி 34 வருடங்களாக முறியடிக்க முடியாத சாதனை... 2வது டெஸ்டில் முறியடித்த கோலி தலைமையிலான இந்திய அணி

டெஸ்ட் தொடரை மேலும் ஸ்வாரஸ்ய படுத்த பகிலரவு போட்டியாக இது நடத்தப்படவுள்ளது. இதனால் மொய்திரா மைதானத்தின் பிட்ச் குறித்து வீரர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அகமதாபாத்

அகமதாபாத்

கடந்த 2015ம் ஆண்டும் மூடப்பட்ட சர்தார் பட்டேல் மைதானம், மறுசீரமைப்பு செய்யப்பட்டு தற்போது மொய்திரா என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 1,10,000 பேர் வரை அமரக்கூடிய இந்த மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும். இந்தியா - இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் போட்டிதான் இங்கு நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகும்.

பலகலிரவு டெஸ்ட்

பலகலிரவு டெஸ்ட்

இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். அதே போல இதற்கு முன்னர் இந்திய அணி ஒரே ஒரு முறை வங்கதேசத்துடன் பகலிரவு போட்டியில் ஆடியுள்ளது. அப்போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு பகலிரவு டெஸ்டில் ஓரளவு அனுபவம் உள்ளது என்று கூறலாம்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

மொய்திரா மைதானத்தின் பிட்ச் குறித்து பேசியுள்ள புஜாரா, பார்ப்பதற்கு பிட்ச் நன்றாக தான் உள்ளது, ஆனால் கணிக்க முடியவில்லை. இதில் பந்து ஸ்விங் ஆகலாம், ஆகாமலும் போகலாம். இது போன்ற சூழ்நிலைகளில் இந்திய வீரர்களுக்கு அனுபவம் இல்லை. வெள்ளை பந்தில் மட்டுமே இதுவரை ஆடியுள்ளதால் இது புதிய அனுபவமாக இருக்கலாம்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

பயிற்சியின் போது பந்தில் நல்ல வேகம் இருந்தது. எனினும் இது மாறக்கூடலாம். இந்திய வீரர்களுக்கு பிங்க் பந்தில் அனுபவம் இல்லை. பல்வேறு போட்டிகளில் 2வது பாதியில் தான் பிட்ச் குறித்து புரிந்துக்கொள்ள முடியும். அதனால் இந்திய வீரர்கள் முதல் இன்னிங்சை பயன்படுத்தி கற்றுக்கொள்வோம் என புஜாரா தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, February 21, 2021, 15:51 [IST]
Other articles published on Feb 21, 2021
English summary
ENGvsIND 3rd Test: Players Keep thinking on ahmedabad pitch.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X