இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

அகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்துபவர்களாக 5 வீரர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்திய - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நாளை அகமபதாபாத்தில் தொடங்குகிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இப்போட்டிக்காக வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் 5 வீரர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அக்‌ஷர் பட்டேல்

அக்‌ஷர் பட்டேல்

இடது கை ஸ்பின்னரான அக்‌ஷர் பட்டேல் கடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் ஆடிய 2 போட்டிகளில் இதுவரை 3 முறை 5 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு எதிராக பிங்க் பாலி இங்கிலாந்து வீரர்கள் திணறுவதால் 4வது டெஸ்டிலும் இவர் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஸ்வின் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான ஃபார்மில் உள்ளார். அதன் காரணமாக கடந்த டெஸ்டில் அதிவேகமாக 400 விக்கெட்களை எடுத்த வீரர் பட்டியலில் 2ம் இடம் பிடித்தார். இதே ஃபார்முடனும், தன்னம்பிக்கையுடனும் 4வது டெஸ்டில் அஸ்வின் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூட்

ரூட்

ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய வீரர் ஜோ ரூட். முதல் டெஸ்டில் இவர் அடித்த இரட்டை சதம் தான் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டது. எனவே 4வது டெஸ்டில் இவரின் பேட்டிங் மிக முக்கியமான ஒன்றாகும். அதே போல கடந்த போட்டியில் பவுலிங்கிலும் ஜோ ரூட் 5 விக்கெட்களை எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித்

ரோகித்

கடந்த ஒரு வார காலமாக மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் அகமதாபாத் பிட்ச்சில் அதிக ரன் அடித்தவர் ரோகித் சர்மா ஆகும். இவரின் அரை சதம் 3வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களை எடுக்க உதவியது. இதனால் அவரின் அதிரடி 4வது டெஸ்டிலும் தொடர்ந்தால் இந்திய அணியின் வெற்றிக்கு உதவும்.

கோலி

கோலி

ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய வீரர் கோலி. இந்த தொடரில் இதுவரை 2 அரை சதம் அடித்துள்ள கோலி, தனது 71 சதத்தை பூர்த்தி செய்ய காத்துள்ளார். சுமார் ஓராண்டு காலமாக கோலி சதமடிக்காமல் உள்ளார். எனவே இப்போட்டியில் சதமடித்தால் கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் கோலி முதலிடம் பிடிப்பார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
5 players to watch out for as India take on England in 4th Test
Story first published: Wednesday, March 3, 2021, 15:33 [IST]
Other articles published on Mar 3, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X