கேப்டன் மாதிரியா பேசுறீங்க? உங்களை சிஎஸ்கே டீம்ல எடுத்ததே தப்பு.. டுபிளெசிஸ்-ஐ விளாசும் ரசிகர்கள்!

மும்பை : தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளெசிஸ் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படு தோல்வி அடைந்ததற்கு சப்பைக் கட்டு கட்டி இருக்கிறார்.

அதைக் கண்ட ரசிகர்கள், டுபிளெசிஸ் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் காரணம் கண்டு பிடித்து கூறி வருவதாகக் கூறி அவரை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

தம்பி.. அதெல்லாம் சரிப்பட்டு வராது விட்ருங்க.. ஆசைப்பட்ட பாக். கேப்டன்.. வாயை அடைத்த அதிகாரி!

ஆழமான விமர்சனம்

ஆழமான விமர்சனம்

சிலர், டுபிளெசிஸ் போன்ற கேப்டன் இருப்பதால் தான் தென்னாப்பிரிக்க அணி சரியாக ஆடவில்லை என்றும் கூறி அவரை கேலி செய்தும் வருகின்றனர். சிலர் சிஎஸ்கே அணியில் அவரை தேர்வு செய்ததே தவறு என ஆழமாக இறங்கி விமர்சித்துள்ளனர்.

டாஸ்

டாஸ்

தென்னாப்பிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று தொடரை 3 - 0 என அந்த அணி இழக்கக் காரணம் மூன்று போட்டிகளிலும் டாஸில் தோற்றது தான் என கூறி இருக்கிறார் டுபிளெசிஸ்.

டாஸ்-ஐ நீக்குங்கள்

டாஸ்-ஐ நீக்குங்கள்

டெஸ்ட் போட்டிகளில் டாஸ்-ஐ நீக்கி விட்டால், வெளிநாடுகளில் ஆடும் அணிகளுக்கும் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர். தொடரின் மூன்றாவது போட்டியில் கூட தனக்கு டாஸ் ராசியில்லை எனக் கூறி டெம்பா பவுமாவை டாஸ் போட வைத்து அதிலும் தோற்றார்.

தோல்விக்கு பின் சமாளிப்பு

தோல்விக்கு பின் சமாளிப்பு

மேலும், இந்தியா மூன்று போட்டிகளிலும் டாஸ் வென்று பேட்டிங் ஆடி முதல் இன்னிங்க்சை இரண்டாம் நாள் இறுதியில் முடித்து தங்களை இருளில் ஆட வைத்து விக்கெட் வீழ்த்தினார்கள் என்றும் கூறி தற்போது இந்திய டெஸ்ட் தொடர் தோல்வியை சமாளித்து இருக்கிறார் டுபிளெசிஸ். ரசிகர்கள் அவரது கருத்தை விமர்சித்து வரும் நிலையில் அவற்றில் சில -

நிறுத்தவே மாட்டார்

டுபிளெசிஸ் மோசமான காரணங்கள் கூறுவதை நிறுத்தப் போகிறார் என நீங்கள் நினைத்தால் அது தவறான எண்ணம். இவர் நிறுத்தவே மாட்டார். அவமானம்!

உதைக்க சக்தி இல்லை

பாப் டுபிளெசிஸ் இன்று என்னை சோர்வடைய செய்யக் கூடாது. அவரை உதைக்க என்னிடம் சக்தி இல்லை எனக் கூறி அவரது தொடர் சாக்கு போக்கை விமர்சித்துள்ளார் இந்த ரசிகர்.

அது தெரியவில்லை

இந்த மனிதருக்கு தோல்வியை எப்படி ஏற்றுக் கொள்வது என தெரியவில்லை எனக் கூறி நேரடியாக விமர்சித்துள்ளார் இந்த ரசிகர். தென்னாப்பிரிக்க அணி சரியாக ஆடாதது தான் காரணம் என பலரும் கூறி உள்ளனர்.

சிஎஸ்கே ரசிகன்

பாப் டுபிளெசிஸ்-ஐ கலாய்க்க வேண்டும் போல உள்ளது. ஆனால், எனக்குள் இருக்கும் சிஎஸ்கே ரசிகன் அதை தடுக்கிறான் எனக் கூறி டுபிளெசிஸ் சிஎஸ்கே வீரர் என்பதால் தான் அமைதியாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

அவமானப்படுத்திக் கொள்கிறார்

அவமானப்படுத்திக் கொள்கிறார்

தென்னாப்பிரிக்கா மோசமாக தோற்க காரணம், அந்த அணியின் மூத்த வீரரான கேப்டன் டுபிளெசிஸ் சரியாக ஆடாதது தான். இப்போது அவரே ஏதோ காரணம் கூறி தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்கிறார் என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

உங்களுக்கு ஏற்றதல்ல

டுபிளெசிஸ், நீங்கள் சர்வதேச அணியான தென்னாப்பிரிக்காவின் கேப்டன். இந்த வாக்கியம் உங்களுக்கு ஏற்றதல்ல. ஐபிஎல்-இல் ஆட நீங்கள் சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டு இருக்கக் கூடாது என கடுமையாக சாடி இருக்கிறார் இந்த ரசிகர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Faf Du plessis slammed by fans for giving excuses to test series loss. Earlier, Du Plessis claimed toss loss spoiled the game of SA.
Story first published: Sunday, October 27, 2019, 20:04 [IST]
Other articles published on Oct 27, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X