For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 
MI vs KKR: "அவர் என்ன சாதிச்சிட்டாருன்னு சான்ஸ் கொடுக்குறீங்க?" - மும்பை அணியை விளாசும் ரசிகர்கள்

அபுதாபி: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணியின் டீம் செலக்ஷன் குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், இன்று (செப்.23) ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கியுள்ளார். மும்பை அணியில், குயின்டன் டி காக் (w), ரோஹித் சர்மா (c), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சவுரப் திவாரி, கைரன் பொல்லார்ட், க்ருனால் பாண்ட்யா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதே போல், கொல்கத்தா அணியில், ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் த்ரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன் (c), தினேஷ் கார்த்திக் (w), ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

fans trolled poor form krunal pandya for including again in mumbai indians vs kkr

இந்நிலையில், சுத்தமாக ஃபார்மில் இல்லாத க்ருனால் பாண்ட்யாவுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது ஏன்? என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தியாவில் நடந்த முதல் பாதி ஐபிஎல் தொடரில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தாத க்ருனால் பாண்ட்யா, அமீரகத்தில் சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலும் மோசமாக விளையாடினார். பவுலிங்கில் 2 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்த க்ருனால் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.

பேட்டிங்கிலும் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில், இன்றைய போட்டியிலும் கொல்கத்தா அணிக்கு எதிராக அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், மும்பை அணியில் இதுவரை பெரியளவில் வாய்ப்பு கிடைக்காமல் அனுகுல் ராய் போன்ற திறமை வாய்ந்த இளம் வீரர்கள் வெளியே உள்ளனர். இவரும் பேட்டிங் ஆல் ரவுண்டர் தான். இந்நிலையில், மீண்டும் மீண்டும் க்ருனால் பாண்ட்யா வாய்ப்பு அளிப்பதற்கு பின்னால் உள்ள காரணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேசமயம், ஹர்திக் பாண்ட்யாவுக்கு இடம் கிடைக்காதது புரியாத புதிராக உள்ளது. சென்னைக்கு எதிரான போட்டியில் அவர் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று 2வது போட்டியில் ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பிவிட்ட நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பை அணியில் என்னதான் நடக்குதோ!

இங்கிலாந்துல கொரோனா வந்தா இரத்தம்.. ஐபிஎல்-ல வந்தா தக்காளி சட்னியா?இங்கிலாந்துல கொரோனா வந்தா இரத்தம்.. ஐபிஎல்-ல வந்தா தக்காளி சட்னியா?

Story first published: Thursday, September 23, 2021, 22:27 [IST]
Other articles published on Sep 23, 2021
English summary
fans trolled poor form krunal pandya MI vs kkr - க்ருனால்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X