இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு இடையே கடும் சண்டை!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN
தென் ஆப்ரிக்காவை வெற்றி பெற போட்டி போடும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி- வீடியோ

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி-20 தொடரில் விளையாடி வரும் இந்திய, ஆடவர் மற்றும் மகளிர அணிகளுக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. யார் முதலில் தொடரை வெல்வது என்பதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளன. ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 5-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றது.

Fight between Indian teams

மறுபக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றுள்ளது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வென்று 2-0 என முன்னிலையில் இருந்தது.

நேற்று நடந்த மூன்றாவது டி-20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது. இதையடுத்து 2-1 என இந்திய மகளிர் அணி முன்னிலையில் உள்ளது.

அதே நேரத்தில் நேற்று நடந்த முதல் டி-20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஆடவர் அணி வென்றது.

அடுத்ததாக 21ம் தேதி 2வது டி-20 போட்டியிலும், 24ம் தேதி 3வது டி-20 போட்டியிலும் ஆடவர் அணி விளையாட உள்ளது. அதே நாட்களில் மகளிர் அணியும் தனது அடுத்த டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.

21ம் தேதி நடக்க உள்ள போட்டியில் வென்றால், இரு அணிகளும் தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. தற்போது யார் முதலில் தொடரை வெல்லப் போகிறார்கள் என்று இந்திய ஆடவர், மகளிர் அணிக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, February 19, 2018, 12:56 [IST]
Other articles published on Feb 19, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற