For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயசு 39.. இன்னும் தளராத அதிரடி.. தல தோனியின் ஃபென்டாஸ்டிக் 5!

சென்னை: தல தோனிக்கு இன்று 39வது பிறந்த நாள். நாடெங்கும் அவரது ரசிகர்கள் அதை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தல தோனியின் ஐந்து சிறப்பான ஆட்டத்தை நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

Recommended Video

Dhoni Birthday 2020 | Happy Birthday Dhoni

சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். அவரது சிறப்பான முந்தைய ஆட்டங்களுக்கு ஈடு இணையே இல்லை என்பதுதான் உண்மை. எந்த வீரரிடமும் இல்லாத பல ஸ்பெஷல்கள் நம்ம தலயிடம் மட்டுமே உள்ளன.

கடந்த ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி தோல்விக்குப் பிறகு தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால்தான் அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் ஆட தோனி ஆயத்தமாகி வந்தார். ஆனால் போட்டித் தொடரை நடத்த முடியாத நிலை.

சிறப்பான ஐபிஎல் அணி... ஏபி டீ வில்லியர்ஸ் வெளியீடு... தோனிதான் எப்பவுமே 'தல' சிறப்பான ஐபிஎல் அணி... ஏபி டீ வில்லியர்ஸ் வெளியீடு... தோனிதான் எப்பவுமே 'தல'

அதிரடி 91

அதிரடி 91

இப்போது தல தோனியின் ஐந்து அற்புத ஆட்டங்களைப் பார்ப்போம். முதல் ஆட்டம்.. இலங்கைக்கு எதிராக ஏப்ரல் 2ம் தேதி 2011ம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுத்த 91 நாட் அவுட். அதுவரை 4வது நிலை வீரராக யுவராஜ் சிங் இறங்கி வந்த நிலையில் தானே இறங்கி அதிரடியாக ஆடி இந்தியாவுக்கு 2வது உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தார் தோனி. அந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான திறமையை தோனி வெளிப்படுத்தினார். கம்பீரும் அவரும் இணைந்து அசத்தினர்.

அதிடி சதம்

அதிடி சதம்

அடுத்த ஆட்டமும் இலங்கைக்கு எதிரானதே. 2005ல் இலங்கைக்கு எதிரான ஜெய்ப்பூரில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் அதிரடியாக ஆடிய தோனி 183 ரன்களைக் குவித்தார். அப்போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 298 ரன்களைக் குவித்திருந்தது. சங்ககாரா சதம் போட்டார். அந்தப் போட்டியில் சச்சின் ஆட்டமிழந்ததும் ஒன் டவுனாக களம் இறங்கினார் தோனி. வழக்கமாக டிராவிட்தான் ஒன்டவுனில் வருவார். ஆனால் தோனி இறங்கி இலங்கை பந்து வீச்சை புரட்டி எடுத்து 183 ரன்களைக் குவித்தார். ஒரு நாள் போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச தனி ஸ்கோர் இதுதான்.

பாக்.கை பதம் பார்த்த 113

பாக்.கை பதம் பார்த்த 113

2012ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அடித்து நொறுக்கிய தோனி 113 ரன்களைக் குவித்தார். ஆனால் தோனி இத்தனை ஆடியும் அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியதுதான் துரதிர்ஷ்டவசமானது. தோனி ஆடியும் இந்தியா தோற்ற அரிய சம்பவம் இது. அப்போட்டியில் ஆரம்பத்தில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 29 என்ற மோசமான நிலையில் இருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில்தான் களமிறங்கினார் தோனி. அதிரடி காட்டிய அவர் 125 பந்துகளில் 113 ரன்களைக் குவித்து இந்தியா 50 ஓவர்கள் நீடிப்பதை உறுதி செய்தார். ஸ்கோரும் 6 விக்கெட் இழப்புக்கு 227 என டீசன்ட்டாக உயர்ந்தது.

சூப்பர் 44

சூப்பர் 44

2012ல் நடந்த காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோனி 44 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சின்ன ஸ்கோர்தான். ஆனால் தோனி அடித்த இந்த அடிதான் இந்தியாவை இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அலற விட்டார் தோனி. இந்தியா 270 ரன்களை சேஸ் செய்து வந்தது. 55 பந்துகளில் 33 ரன்களை எடுத்த நிலையில், கடைசி ஓவரை எதிர்கொண்டார் தோனி. கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 13 ரன்கள் தேவை. மெக்கே பந்து வீசினார். தோனி அடித்தார். 3வது பந்தில் அவர் அடித்த சிக்ஸர் 112 மீட்டர் உயரத்துக்குப் பறந்து அடிலைட் மைதானத்தையே அலற வைத்தது.

இன்னொரு குட்டிப் புயல்

இன்னொரு குட்டிப் புயல்

அதேபோல 2013ம் ஆண்டு டிரினிடாடில் நடந்த முத்தரப்பு தொடரின் இறுநதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக அதிரடி காட்டினார் தோனி. அப்போட்டியில் முதலில் இலங்கையை 201 ரன்களில் சுருட்டியது இந்தியா. பின்னர் ஆட வந்த இந்தியா பேட்டிங்கில் தடுமாறியது. 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இந்தியா ரோகித் சர்மா ஆட்டமிழந்த பிறகு சரியத் தொடங்கியது. 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் என்ற நிலைக்குப் போன இந்தியாவைத் தூக்கி நிறுத்தி வெற்றி பெற வைத்தது தோனி ஆட்டமிழக்காமல் எடுத்த 45 ரன்கள்தான். இஷாந்த் சர்மா நல்ல கம்பெனி கொடுத்ததால் தோனி அசத்த எளிதாக இருந்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி மூலம் வெளுத்து வெற்றி பெற வைத்தார் தோனி.

Story first published: Tuesday, July 7, 2020, 10:09 [IST]
Other articles published on Jul 7, 2020
English summary
Dhoni's legacy is safe in Indian cricket as the most successful limited-over captain and as a batsman
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X