For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் இல்லைனா இந்தியா ஜெயிக்காது.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. ரோகித்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை!

மும்பை: ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அந்த ஒரு இளம் வீரர் விளையாடினால் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடியும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷி கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இரு அணிகளும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன.

இதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு புறப்பட்டுவிட்ட சூழலில், இந்திய அணி வீரர்கள் பிப்ரவரி 2ம் தேதியன்று நாக்பூரில் ஒன்று சேரவுள்ளனர். அங்குதான் முதல் டெஸ்ட் நடைபெறவுள்ளது.

2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம் 2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஆஸி, டெஸ்ட் தொடர்

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, அஸ்வின் உள்ளிட்டோர் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். குறிப்பாக காயத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த ரவீந்திர ஜடேஜா கம்பேக் தரவுள்ளார். இதனால் ப்ளேயிங் 11ல், அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் என 4 பேருக்கு இடையே போட்டி உருவாகியுள்ளது.

குல்தீப்பின் ஃபார்ம்

குல்தீப்பின் ஃபார்ம்

நீண்ட நாட்களாக வாய்ப்பின்றி இருந்த குல்தீப் யாதவ், கம்பேக் தந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் ஒரே போட்டியில் 8 விக்கெட்களை கைபற்றி அசத்தினார். எனினும் அதன்பின்னர் அவருக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைப்பதில்ல்லை. ஆஸ்திரேலிய தொடரிலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா முதன்மை தேர்வாக இருந்தால் அக்‌ஷர் பட்டேல் 3வது வீரராக இடம்பிடிக்க தான் அதிக வாய்ப்புள்ளது.

முன்னாள் வீரர் விளக்கம்

முன்னாள் வீரர் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் சுனில் ஜோஷி பேசியுள்ளார். அதில், குல்தீப் யாதவ் அருமையான ஃபார்மில் உள்ளார். அவர் விக்கெட் எடுக்கும் முறையை நன்கு கவனித்து வருகிறேன். போல்ட் ஆவது, ஸ்லிப் கேட்ச், ஸ்டம்பிங், மிட் ஆஃப், மிட் ஆன் கேட்ச்கள் போன்றவையே ஸ்பின்னர்கள் மிகவும் விரும்புவது. அதில் குல்தீப் கை தேர்ந்துள்ளார்.

ஜடேஜாவின் ஃபிட்னஸ்

ஜடேஜாவின் ஃபிட்னஸ்

ஒருவேளை ஜடேஜா உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்றால், அஸ்வின் முதல் தேர்வாக இருப்பார். பின் அக்‌ஷர் மற்றும் குல்தீப் ஆகியோர் மீதமுள்ள இடத்தை பிடிப்பார்கள். ஒருவேளை ஜடேஜாவும் விளையாடினால், 3வது ஸ்பின்னராக குல்தீப் தான் சேர்க்கப்பட வேண்டும். கள சூழலை யோசிக்க வேண்டாம், குல்தீப்பின் ஃபார்மை மட்டும் பாருங்கள்.

குல்தீப்பின் லைன்

குல்தீப்பின் லைன்

குல்தீப் யாதவ் எடுத்த அனைத்து விக்கெட்களும், 30 யார்ட் வட்டத்திற்குள்ளே தான் இருந்தன. அதுவும் தொடர்ச்சியாக அதற்குள்ளாக தான் கேட்ச்-கள் பிடிக்கப்பட்டன. அந்த அளவிற்கு லைன் மற்றும் லெந்த் சிறப்பாக உள்ளது. எனவே ஆஸ்திரேலியவை இந்தியா வீழ்த்த வேண்டும் என்றால் குல்தீப் யாதவ் தான் உதவுபவராக இருப்பார் என கூறியுள்ளார்.

Story first published: Tuesday, January 31, 2023, 16:40 [IST]
Other articles published on Jan 31, 2023
English summary
Former Chief selector Sunil Joshi sends warning Rohit sharma to add kuldeep yadav in playing 11 ahead of India vs australia Test series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X