For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருவழியாக பெரோஸ் ஷா கோட்லா ஸ்டாண்டிற்கு கம்பீர் பெயர்.. தாமதத்திற்கு காரணம் கேட்கும் கவுதம் கம்பீர்

டெல்லி : டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் வடக்குப்புற ஸ்டாண்டிற்கு தன்னுடைய பெயரை சூட்டுவதை தாமதப்படுத்தியது ஏன் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவர் ரஜத் ஷர்மாவிடம் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் வடக்குப்புற ஸ்டாண்டிற்கு கவுதம் கம்பீரின் பெயரை வைப்பது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக, தாமதத்திற்கான காரணம் குறித்து ரஜத் ஷர்மா தனக்கு விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கவுதம் கம்பீர் கேட்டுள்ளார்.

 டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன்

டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன்

இந்தியாவின் சிறந்த ஆட்டக்காரராக விளங்கிய கவுதம் கம்பீர், ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து, பின்பு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தவர்.

 கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு

கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு

இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகள், 147 சர்வதேச ஒருநாள் போட்டிகள், மற்றும் 37 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர், டிடிசிஏவின் இயக்குராகவும் இருந்துள்ளார். தான் இயக்குநராக இருந்தபோது, தன்னுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்றும் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார்.

 இளம் வீரர்கள் பாதிப்பு

இளம் வீரர்கள் பாதிப்பு

டெல்லி சங்கத்தின் நிர்வாகிகளின் தொடர் ஈகோவினால் டெல்லியின் இளம் வீரர்கள் வளர்ச்சி பெற முடியாமல் தவித்து வருவதாகவும் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார். தங்களது ஈகோவை விட்டுவிட்டு, டெல்லி அணியின் வளர்ச்சிக்கு அதன் நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 ரஜத் ஷர்மா பங்கேற்கவில்லை

ரஜத் ஷர்மா பங்கேற்கவில்லை

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் வடக்கு புற ஸ்டாண்டிற்கு தன்னுடைய பெயரை வைப்பது குறித்து கடந்த மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதை செயல்படுத்த 6 மாதங்களுக்கு மேல் தாமதம் செய்ய காரணம் என்ன என்று டிடிசிஏ தலைவர் ரஜத் ஷர்மாவை அவர் கேள்வி கேட்டுள்ளார்.

 ரஜத் ஷர்மா ராஜினாமா

ரஜத் ஷர்மா ராஜினாமா

டிடிசிஏ தலைவர் பதவியை ரஜத் ஷர்மா இந்த மாதத்தின் துவக்கத்திலேயே ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்காத டெல்லி கிரிக்கெட் சங்கம், அவர் அந்த பதவியில் தொடர கேட்டுள்ளது.

 அருண் ஜெட்லி பெயர்

அருண் ஜெட்லி பெயர்

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதான வளாகத்திற்கு மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெட்லியின் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அருண் ஜெட்லி மைதானத்தின் ஸ்டாண்டிற்கு தன்னுடைய பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு தன்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கம்பீர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Story first published: Wednesday, November 27, 2019, 12:35 [IST]
Other articles published on Nov 27, 2019
English summary
Gautam Gambhir Asks the reason for the delay of gambhir stand to DDCA President
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X