For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அநியாயமா இருக்கே..கவுன்டியில் விளையாடாத ரஷித் இங்கிலாந்து டெஸ்ட் அணியிலா?..எதிர்க்கும் மாஜி வீரர்கள்

By Aravinthan R

லண்டன் : இங்கிலாந்து அணியின் தேர்வுக் குழு தலைவர் எட் சீப் (Ed Chief), இங்கிலாந்தின் உள்ளூர் கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத அதில் ரஷிதை, டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்திருப்பது, கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ரஷித், தானாகவே கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி, பதினெட்டு மாதங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காத ஒருவரை எப்படி டெஸ்ட் அணியில் சேர்க்கலாம்? என்பதே இந்த முடிவை எதிர்ப்பவர்கள் கேட்கும் கேள்வி.

former england players are unhappy about the selection of adil rashid


முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், தேர்வுக் குழுவின் இந்த முடிவு கேலிக்குரியதுஎன குறிப்பிட்டுள்ளார். மற்றொரு இங்கிலாந்து வீரர் மாத்யூ ஹோகார்ட், இந்த முடிவால் கவுண்டி கிரிக்கெட் மதிப்பிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதில் ரஷித் கூறும்போது, “இது நிச்சயம் கடினமான முடிவு. எனக்கே இது ஆச்சரியமாகத் தான் இருந்தது. டெஸ்ட் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், வழக்கமாக கவுன்டி போட்டிகளின் செயல்பாட்டின் படி தான் வர வேண்டும். ஆனால், நான், எட் ஸ்மித் மற்றும் சிலரும் பேசினோம். அவர்கள், நான் அணியில் சேர்ந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி என கூறினார்கள்” என்றார்.

இது பற்றி தேர்வுக் குழு தலைவர் எட் ஸ்மித் கூறுகையில், “இந்த வெயில்காலத்தில், பிட்ச் சுழலுக்கு நன்கு ஒத்துழைக்கும் என தெரிந்து கொண்டுள்ளோம். இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் தேவை எனும் போது நாங்கள் எப்படி அவர்களை தேர்ந்தெடுப்பது? இந்த அடிப்படையில் அதில் ரஷித் தற்போது ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருவது, அவரது தனித்துவம் மற்றும் அவரின் சமீபத்திய வளர்ச்சியையும் கணக்கில் கொண்டோம். அவர் தன் வாழ்நாளின் சிறந்த பார்மில் இருக்கிறார்” என்றார்.

மேலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்த முடிவுக்கு முழு ஆதரவு அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், தான் சிறந்த வீரர்களை தேர்வு செய்து, களத்தில் இறங்கும் பதினோரு வீரர்களை கேப்டன் மற்றும் கோச் தேர்வு செய்ய விடுவதே தன் பணி என தெரிவித்தார்.

தற்போது இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, அதில் ரஷித் என இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜோ ரூட்- பகுதி நேர சுழல் பந்து வீச்சாளராக செயல்படுவார்.







Story first published: Friday, July 27, 2018, 10:59 [IST]
Other articles published on Jul 27, 2018
English summary
Former England Players are unhappy about the selection of Adil Rashid, who himself staying away from County test matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X