For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது ஒரு ஆட்டமா? அவர்களுக்கெல்லாம் ஏன் புகழ்ச்சி.. பாகிஸ்தான் முன்னாள் வீரர் காட்டம்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியா திறமையாக ஆடி வென்றதாக எண்ணிக்கொள்ள வேண்டாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசியுள்ளார்.

இந்திய - இங்கிலாந்து மோதிய 3வது டெஸ்டின் பிட்ச் சர்ச்சை நீண்டுக்கொண்டே செல்கிறது. பல்வேறு வீரர்களும் அகமதாபாத் பிட்ச்-க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் அக், 3வது டெஸ்ட் போட்டி குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கலக்கல் இந்திய வீராங்கனைகள்... ஐசிசி ஒருநாள் தரவரிசை.. முதல் 10 இடங்களில் 4 பௌலர்கள்! கலக்கல் இந்திய வீராங்கனைகள்... ஐசிசி ஒருநாள் தரவரிசை.. முதல் 10 இடங்களில் 4 பௌலர்கள்!

சர்ச்சை ஏன்?

சர்ச்சை ஏன்?

இரு அணிகளும் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் ஸ்பின்னர்கள் ஆதிக்கமே இருந்ததால் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது. கடந்த 54 ஆண்டுகளில் இரண்டே நாட்களில் ஒரு டெஸ்ட் போட்டி முடிவடைவது இது முதல் முறையாகும்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் உருவாக்கலாம், ஆனால் இப்படி மிகவும் மோசமாக பிட்ச் உருவாக்குவது சரியில்லை என முன்னாள் வீரர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இங்கிலாந்து அணி ஒரு படி மேல் சென்று ஐசிசியிடம் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு அணிகளும் நாளை மோதவுள்ள 4வது டெஸ்ட் போட்டியில் பிட்ச் குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 தாக்கு

தாக்கு

இது குறித்து பேசியுள்ள அவர், ஒரு டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவடைந்து நான் கேள்விப்பட்டதில்லை. இந்தியா அவ்வளவு சிறப்பாக செயல்பட்டதா?. அகமதாபாத் பிட்ச் சரியானது என்றால் இந்திய அணி சிறப்பாகத்தான் ஆடியுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல. இது போன்று பிட்ச் செய்யக்கூடாது. இந்த வெற்றியை ஆஸ்திரேலியாவுடன் பெற்ற வெற்றியை போன்று இந்தியா எடுத்துக்கொள்ள வேண்டாம். என சாடியுள்ளார்.

புகழ்ச்சி எதற்கு

புகழ்ச்சி எதற்கு

டி20 போட்டியை விட மிகவும் குறைவான ரன்கள் இந்த டெஸ்ட் போட்டியில் வந்துள்ளது. ஒரே நாளில் 17 விக்கெட்கள் சரிந்துள்ளது. அந்த பிட்சில் ஜோ ரூட் போன்ற பேட்ஸ்மேனே 5 விக்கெட்கள் எடுத்த நிலையில், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் எடுப்பதில் என்ன ஆச்சரியம் உள்ளது. அவர்களை ஏன் புகழ வேண்டும் என இன்சாம் உல் அக் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 3, 2021, 23:53 [IST]
Other articles published on Mar 3, 2021
English summary
former Pakistan captain Inzamam-Ul-Haq weighs on Pitch Controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X