For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜாவால் 3 நன்மைகள் இருக்கு.. தேர்வுக்குழு முன்னாள் தலைவரின் விளக்கம்.. இந்திய அணி திட்டம் என்ன?

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜடேஜா இடம் பெறுவது குறித்து தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ்மான் கெய்வாட் திட்டவட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை சவுத்தாம்டனில் தொடங்குகிறது.

போட்டிக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள சூழலில் இரு அணிகளின் ப்ளேயிங் 11 குறித்த எதிர்பார்ப்புகள் எழத்தொடங்கிவிட்டன.

குழப்பம்

குழப்பம்

இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தவரை 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அஸ்வின் - ஜடேஜா என 2 ஸ்பின்னர்களை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது. ஆனால் போட்டி நடைபெறும் சவுத்தாம்டனில் மழைக்கு வாய்ப்புள்ளதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால் ஜடேஜாவை வெளியில் உட்காரவைத்துவிட்டு 4வது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜை களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் வீரர் கண்டனம்

முன்னாள் வீரர் கண்டனம்

இந்நிலையில் இதற்கு அன்ஷுமான் கெயிக்வாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் இந்திய அணியின் முன்னாள் வீரராக மட்டுமல்லாமல் இந்திய அணி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்திய தேர்வுக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். ப்ளேயிங் 11 குறித்து பேசிய அவர், எந்தவொரு காரணத்திற்காகவும் ஜடேஜா உட்காரவைக்கப்பட கூடாது. அவர் எதற்காக விலக வேண்டும். 3 வடிவ கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு ஜடேஜா மிகப்பெரிய சொத்து. 3 வேகப்பந்துவீச்சாளர்களே இங்கிலாந்தில் போதும். 3 வீரர்கள் செய்யாததை 4வது வீரர் செய்துவிடமாட்டார்.

ஜடேஜா ஏன் தேவை?

ஜடேஜா ஏன் தேவை?

எத்தனை சர்வதேச அணிகள் ஜடேஜா போன்ற சிறந்த இடதுகை ஸ்பின்னர்களை வைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஜடேஜா ஸ்பின்னராக மட்டுமல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். அதே போல உலகின் தலைசிறந்த ஃபீல்டராகவும் திகழ்கிறார். இதனை விட வேறு என்ன வேண்டும் என அன்ஷுமான் தெரிவித்துள்ளார்.

அசத்தல் ஃபார்மில் ஜடேஜா

அசத்தல் ஃபார்மில் ஜடேஜா

இந்திய அணியில் வாய்ப்பின்றி சிரமப்பட்டு வந்த ஜடேஜாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி கைகொடுத்தது. அதில் முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெறாத ஜடேஜா 5வது போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும், ஜடேஜாவின் ஃபார்ம் வியக்க வைத்தது. அதில் அவர் 7 விக்கெட் எடுத்தது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் 82 ரன்களை விளாசினார். அன்று முதல் தற்போது வரை ( 3 ஆண்டுகளாக) ஜடேஜாவின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 55.57 ரன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 17, 2021, 17:51 [IST]
Other articles published on Jun 17, 2021
English summary
Former India coach Anshuman Gaekwad, believed Jadeja is 'triple-plus' for India at WTC final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X