For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஜர் ஃபெடரருக்கு சச்சின், கோலி வாழ்த்து.. களத்தில் பரம எதிரி நடால் என்ன சொன்னார் தெரியுமா ?

மும்பை: டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் ஓய்வு முடிவை அறிவித்ததை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Recommended Video

ரோஜர் ஃபெடரரின் ஓய்வுக்கு பிரியாவிடை சொன்ன இந்திய கிரிக்கெட் வீரர்கள்

அடுத்த வாரம் தொடங்கும் லேவர்ஸ் கோப்பை தொடருடன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்ட பெடரர், இனி கிராண்ட் ஸ்லாம் உள்ளிட்ட எவ்வித போட்டிகளிலும் பங்கேற்க போவதில்லை என்றும் தெரிவித்தார்.

ரோஜர் பெடரர் விலகல் டென்னிஸ் உலகத்தில் ஒரு வெற்றிடத்தை நிரப்பி விட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் .இந்த நிலையில் ரோஜர் ஃபெடரரின் களத்தில் பரம எதிரியும் களத்திற்கு வெளியே உயிர் நண்பனாக விளங்கும் ரபேல் நடால் என்ன சொன்னார் என்பதை கேட்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர் .

 ஒரே கல்லில் 3 மாங்காய்.. மும்பை அணியின் பயிற்சியாளராகும் மார்க் பவுச்சர்.. அட்டகாச அறிவிப்பு! ஒரே கல்லில் 3 மாங்காய்.. மும்பை அணியின் பயிற்சியாளராகும் மார்க் பவுச்சர்.. அட்டகாச அறிவிப்பு!

சோகமான நாள்

சோகமான நாள்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடால் எனது நண்பனே, எனது கடும் போட்டியாளரே இந்த நாள் வரக்கூடாது என்று நான் விரும்பினேன். தனிப்பட்ட விதமாக இது எனக்கு ஒரு துயர நாள். எனக்கு மட்டுமல்ல விளையாட்டு உலகில் உள்ள அனைவருக்கும் தான். உங்களுடன் விளையாடியது என் வாழ்நாளில் பெரும் பாக்கியமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். உங்களுடன் களத்திலும், களத்திற்கு வெளியேவும் பல சிறப்பான தருணங்களை பகிர்ந்து கொண்டதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆர்வமாக உள்ளேன்

ஆர்வமாக உள்ளேன்

எதிர்காலத்திலும் நாம் இதுபோன்றுதான் இருப்போம் என்று கண்டிப்பாக தெரியும். தற்போது உங்களுக்கும் உங்கள் மனைவி குழந்தைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். லண்டனில் உங்களை லேவர்ஸ் கோப்பைக்காக காண ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளேன். இதேபோன்று கிரிக்கெட் உலகின் மன்னனான சச்சின் டெண்டுல்கர் பெடரரின் தீவிர ரசிகர் ஆவார்.இருவரும் சமூக வலைத்தளத்திலும் நேரிலும் தங்களது நட்பை பலமுறை பாராட்டி இருக்கின்றனர்.

சச்சினுடைய வாழ்த்து

சச்சினுடைய வாழ்த்து

2011 ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடங்கும் போது இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு இந்த நூற்றாண்டில் முக்கிய விளையாட்டு தருணமாக பலரால் கருதப்படுகிறது. இந்த நிலையில் சச்சின் வெளியிட்டுள்ள ட்வீ ட்டில், ரோஜர் பெடரர் விளையாட டென்னிசை பார்த்து நாங்கள் காதலில் விழுந்தோம்.மெதுவாக உங்களுடைய டென்னிஸ் எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கலந்து விட்டது. அது எங்கள் வாழ்க்கையை விட்டு என்றும் போகாது.எங்கள் வாழ்க்கையில் பல சிறப்பான தருணங்கள் கொடுத்ததற்கு மிகவும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்

கிங் ரோஜர்

கிங் ரோஜர்

இதேபோன்று கிரிக்கெட்டில் ரசிகர்களால் கிங் கோலி என்று அழைக்கப்படும் விராட் கோலி பெடரரை, கிங் ரோஜர் என்று அன்புடன் அழைத்துள்ளார். மேலும் டென்னிஸ் விளையாட்டில் என்றென்றும் சிறந்த வீரர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் டென்னிஸ் விளையாட்டு இருந்து ஓய்வு பெற்ற செரினா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் ஓய்வு காலத்திற்கு உங்களை வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, September 16, 2022, 17:27 [IST]
Other articles published on Sep 16, 2022
English summary
From Nadal to Kohli - Tributes Pouring For Roger Federer Retirement ரோஜர் ஃபெடரருக்கு சச்சின், கோலி வாழ்த்து.. களத்தில் பரம எதிரி நடால் என்ன சொன்னார் தெரியுமா ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X