For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின், ஜடேஜா உள்ளே… தினேஷ் கார்த்திக் வெளியே… அட.. இது நம்ம கம்பீரின் உலக கோப்பை கனவு அணி

அஸ்வின், ஜடேஜா உள்ளே... தினேஷ் கார்த்திக் வெளியே... அட.. இது நம்ம கம்பீரின் உலக கோப்பை கனவு அணி

டெல்லி:இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி குறித்து கம்பீர் தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார். அதில் நம்ம ஊர் நாயகன் அஸ்வினுக்கு இடம் அளித்துள்ளார்.

உலகக்கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகள் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுவது இங்கிலாந்து மற்றும் இந்தியாவை தான். இந்த இரு அணிகளும் தான் உலக கோப்பை தொடரில் முக்கியத்துவம் பெறுகின்றன.

முன்னாள் வீரர்கள் பலரும் உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்த தங்களின் கணிப்புகளை, வீரர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், உலகக் கோப்பைக்கான தனது கனவு இந்திய அணியை அறிவித்துள்ளார்.

நாளை ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. விஜய் சங்கருக்கு வாய்ப்பு? இதோ உத்தேச பட்டியல்நாளை ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. விஜய் சங்கருக்கு வாய்ப்பு? இதோ உத்தேச பட்டியல்

அஸ்வினுக்கு வாய்ப்பு

அஸ்வினுக்கு வாய்ப்பு

அதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோருக்கு அவர் வாய்ப்பு அளிக்கவில்லை. மாறாக, தமிழக வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கூட்டணி வீரர்கள்

கூட்டணி வீரர்கள்

குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் கூட்டணியை போன்று ஜடேஜா, அஸ்வின் கூட்டணியை கம்பீர் தேர்வு செய்துள்ளார். கடைசியாக 2017-ம் ஆண்டு ஜுன் மாதம் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார்.

காயத்தால் நீக்கம்

காயத்தால் நீக்கம்

அதன்பின் அணியில் இருந்து அஸ்வின் முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டார். டெஸ்ட் டில் மட்டும் அஸ்வின் இடம் பெற்றுவந்தாலும், அதற்கும் சோதனை வந்தது. ஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக நீக்கப்பட்டார்.

யோசனைகள்

யோசனைகள்

தாம் தேர்வு செய்துள்ள கனவு அணியில் சில யோசனைகளையும், குறிப்புகளை சொல்லி இருக்கிறார் கம்பீர். இந்திய அணியில் அனுபவம் மிக்க சுழற் பந்துவீச்சாளர் தேவை. அதுவும் நெருக்கடியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தும் அனுபவம் கொண்ட வீரர் அவசியம் தேவை. அந்த இடத்துக்கே அஸ்வினே போதுமானதாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளதாக கூறுகிறார்.

தினேஷ் கார்த்திக் இல்லை

தினேஷ் கார்த்திக் இல்லை

அவர் தவிர.. ஆல்ரவுண்டர்களாக அணியில் விஜய் சங்கர், ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். மாற்று விக்கெட் கீப்பர்களாக தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் தேவையில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக கே.எல்.ராகுலை மாற்று விக்கெட் கீப்பராகவும், தொடக்க வீரராகவும் களமிறக்கலாம் என்றும் கம்பீர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சில் உமேஷ் யாதவ் இருப்பில் வைத்து கொள்ளலாம். பிரதான பந்து வீச்சாளர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சமி ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.

16 பேர் விவரம்

16 பேர் விவரம்

மொத்தத்தில் கம்பீர் தேர்வு செய்த அணியில் முழுமையான அளவில் வீரர்கள் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. அவர் தேர்வு செய்த 16 பேர் கொண்ட அணி விவரம்:

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், விராட் கோலி, அம்பதி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிர்த் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சமி, ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ்.

Story first published: Monday, March 4, 2019, 14:21 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
Former Indian cricketer Gautam Gambhir made a few surprising inclusions in his predicted Indian squad for the upcoming 2019 World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X