டெல்லி கேபிடல்சுடன் கவுதம் கம்பீரின் பார்ட்னர்ஷிப்

டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் அணியில் 10 சதவிகித ஸ்டாக்குகளை அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் வாங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல்லையொட்டி இந்த நடைமுறை சாத்தியப்படுத்தப் படாது என்று தெரிவித்துள்ள அணியின் நிர்வாகி, ஐபிஎல் தொடரையடுத்து இது நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி, பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த பொறுப்பு கம்பீருக்கு அளிக்கப்படுவது குறித்தும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்த நிர்வாகி கூறினார்.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

டெல்லி அணியின் 50 சதவிகித ஷேர்களை கடந்த ஆண்டில் ஜேஎஸ்டபள்யூ 550 கோடி ரூபாயில் வாங்கியது. இதையடுத்து அணி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சவுரவ் கங்குலி ஆலோசகர்

சவுரவ் கங்குலி ஆலோசகர்

டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயர் டெல்லி கேபிடல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும் ஆலோசகராக சவுரவ் கங்குலியும் நியமிக்கப்பட்டனர்.

ஷேர்களை வாங்க ஆர்வம்

ஷேர்களை வாங்க ஆர்வம்

இந்நிலையில் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர், அந்த அணியின் 10 சதவிகித ஷேர்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுகுறித்து பல்வேறு யூகங்கள் வலம்வந்த வண்ணம் உள்ளது.

அணியின் நிர்வாகி விளக்கம்

அணியின் நிர்வாகி விளக்கம்

இந்நிலையில் இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை உறுதி செய்த அவர், ஆனால் இந்த ஆண்டு சீசனில் இது நடைமுறை படுத்தப்படாது என்றும் கூறினார்.

உறுதி செய்யப்படவில்லை

உறுதி செய்யப்படவில்லை

டெல்லி கேபிடல்சின் ஆலோசகராக இருந்த சவுரவ் கங்குலி பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு பதிலாக கவுதம் கம்பீர் ஆலோசகராக நியமிக்கப்படுவாரா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Gautam Gambhir's Partnership with DC is not Happening as of now - Official
Story first published: Thursday, January 9, 2020, 18:19 [IST]
Other articles published on Jan 9, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X