தென்னாப்பிரிக்காவில் தொடர்‘ தோல்விக்கு முற்றுப்புள்ளி

By: SRIVIDHYA GOVINDARAJAN

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, அதன் மண்ணில் தொடரை வென்றதில்லை என்ற மோசமான சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

3 டெஸ்ட்கள், 6 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்றுள்ளது.

டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் வென்று, 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் மண்ணில், ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை என்ற மோசமான சாதனை தொடர்கிறது.

அதிரடி வெற்றிகள்

அதிரடி வெற்றிகள்

இந்த நிலையில், 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடர் துவங்கியது. முதல் இரண்டு ஆட்டங்களிலும் அபாரமாக வென்ற இந்திய அணி, கேப்டவுனில் நேற்று நடந்த ஆட்டத்தில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முன்னணியில் இந்தியா

முன்னணியில் இந்தியா

இதன் மூலம், 6 போட்டிகள் கொண்ட தொடரில், 3-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டியில் வென்றால், தொடரை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வென்றதில்லை

தென்னாப்பிரிக்காவில் வென்றதில்லை

தென்னாப்பிரிக்காவில், அந்த அணிக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா இதுவரை வென்றதில்லை. இதுவரை நான்கு முறை இந்தியா தென்னாப்பிரிக்காவில் விளையாடியுள்ளது. 1992-93ல் 5-2, 2006-07ல் 4-0, 2010-11ல் 3-2, 2013-14ல் 2-0 என தென்னாப்பிரிக்காவே தொடர்களை வென்றுள்ளது.

மோசமான சாதனை முறியுமா

மோசமான சாதனை முறியுமா

இந்த முறை தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து இந்தியா தப்பியுள்ளது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக ஒருதினப் போட்டித் தொடரை வெல்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

Story first published: Thursday, February 8, 2018, 11:33 [IST]
Other articles published on Feb 8, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற