For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹேப்பி பர்த்டே கேப்டன்!! யாரும் செய்யாத அந்த சாதனை.. கபில் தேவ் பற்றி தெரியாத தகவல்கள்!

Recommended Video

Happy Birthday Kapil Dev | Facts about Kapil Dev

மும்பை : இந்தியாவின் முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ் தனது 61வது வயதில் அடி எடுத்து வைத்தார்.

இந்திய அணியின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராகவும், இந்தியாவுக்கு கிடைத்த மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளராகவும் கருதப்படுகிறார் கபில் தேவ்.

கபில் தேவ் தலைமையில் இந்திய அணி ஆடிய போது தான் இந்தியாவில் கிரிக்கெட் என்ற விளையாட்டு பெரிய அளவில் மக்களின் கவனத்தை பெற்றது.

உலகக் கோப்பை வெற்றி

உலகக் கோப்பை வெற்றி

குறிப்பாக 1983ஆம் ஆண்டில் இந்தியாவை முதல் முறையாக உலகக் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் கபில் தேவ். இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸை இறுதிப் போட்டியில் தோற்கடித்தார்.

திருப்புமுனை

திருப்புமுனை

அது தான் இந்திய கிரிக்கெட்டின் திருப்புமுனையாக அமைந்தது. அப்படி இந்திய கிரிக்கெட்டையே மாற்றி அமைத்த கபில் தேவ் பற்றி அதிகம் வெளியே தெரியாத சில தகவல்களை பற்றி பார்க்கலாம்.

ஹரியானா அணியில் அறிமுகம்

ஹரியானா அணியில் அறிமுகம்

கபில் தேவ் 1975 நவம்பரில் ஹரியானா அணிக்காக களமிறங்கி, பஞ்சாபிற்கு எதிராக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹரியானா அணி 1991 ரஞ்சி டிராபி தொடரை வென்ற போது முக்கிய பங்கு வகித்தார் கபில் தேவ். அதுதான் அவரது முதல் மற்றும் ஒரே ரஞ்சி டிராபி சாம்பியன்ஷிப்பாகும்.

டெஸ்ட் அறிமுகம்

டெஸ்ட் அறிமுகம்

ஹரியானா அணிக்காக உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடிய நிலையில், கபில் தேவ் 1978ஆம் ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் 33 பந்துகளில் அரைசதம் அடித்த தனது ஆல்ரவுண்டர் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

கேப்டன் ஆனார்

கேப்டன் ஆனார்

1982-83 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான தொடரில் அப்போதைய கேப்டன் சுனில் கவாஸ்கர் ஓய்வெடுத்தபோது, முதன்முறையாக கேப்டனாக செயல்பட்டார். பின் 1983 உலகக் கோப்பையில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார்.

மிரட்டல் ஆட்டம்

மிரட்டல் ஆட்டம்

அந்த உலகக்கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கபில் தேவ், சையது கிர்மானியுடன் 9வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து மிரட்டினார். அந்தப் போட்டியில் 138 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். அவர் 1983 உலகக் கோப்பையில் எட்டு போட்டிகளில் ஆடி 303 ரன்கள் எடுத்து, 12 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது பேட்டிங் சராசரி 60.6 ஆகும்.

ரன் அவுட்

ரன் அவுட்

கபில் தேவ் பற்றி அதிகம் அறியப்படாத சில புள்ளிவிவரங்களை காண்போம். கபில் தேவ் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 184 இன்னிங்ஸ்களில் ஒருபோதும் ரன் அவுட் ஆனதில்லை.

ரிச்சர்ட் ஹாட்லி சாதனை

ரிச்சர்ட் ஹாட்லி சாதனை

1994 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை முறியடித்த கபில் தேவ், அத்துடன் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார்.

யாரும் செய்யாத சாதனை

யாரும் செய்யாத சாதனை

கிரிக்கெட் வரலாற்றில் 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி 5000 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் இவர் தான். இந்த சாதனையை எந்த வீராராலும் செய்ய முடியவில்லை. 2002ஆம் ஆண்டில் விஸ்டன் பத்திரிக்கையால் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்டார்.

கோல்ஃப்

கோல்ஃப்

கபில் தேவ் 1990ஆம் ஆண்டு ரோமி பாட்டியாவை மணந்தார். அவர்களுக்கு அமியா தேவ் என்ற மகள் உள்ளார். 1994ஆம் ஆண்டு முதல், அவர் கோல்ஃப் விளையாட்டை தீவிரமாக விளையாடி வருகிறார். 2000ஆம் ஆண்டில் லாரன்ஸ் அறக்கட்டளையின் ஒரே ஆசிய நிறுவனராக இருந்தார். கபில் தேவ்விற்கு 2010ஆம் ஆண்டு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் கௌரவம் அளிக்கப்பட்டது.

Story first published: Monday, January 6, 2020, 11:43 [IST]
Other articles published on Jan 6, 2020
English summary
Happy Birthday Kapil Dev - Here are some of the less known facts about Kapil Dev
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X