For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உயிரைப் பணயம் வைச்சு வேலை செஞ்சா இப்படியா அடிப்பீங்க? கொந்தளித்த ஹர்பஜன் சிங்.. ஷாக் சம்பவம்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் காவல்துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து கோபம் அடைந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில், காவல்துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

ஊரடங்கை மதிக்காமல் ஆட்டம் போட்ட கும்பல்.. தட்டிக் கேட்ட போலீசுக்கு பளார்.. ஷாக் சம்பவம்!ஊரடங்கை மதிக்காமல் ஆட்டம் போட்ட கும்பல்.. தட்டிக் கேட்ட போலீசுக்கு பளார்.. ஷாக் சம்பவம்!

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 660க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நிலை இந்தியாவிற்கும் வரலாம் என அஞ்சப்படுகிறது.

நடவடிக்கை

நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் 14 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என்பதால் நீண்ட நாட்கள் மக்கள் வெளியில் வராமல் இருந்தால் அதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்தை வெகுவாக குறைக்கலாம் என கூறப்படுகிறது. அதை ஒட்டியே இந்த ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

மக்கள் நிலை

மக்கள் நிலை

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வீட்டை விட்டு வெளியே வரும் மக்களை காவல்துறையினர் கண்டித்து வருகின்றனர். எனினும், மக்கள் பலரும் மளிகை பொருட்கள், பால், மருந்து வாங்க வெளியே செல்ல வேண்டி உள்ளது.

காவல்துறை கண்டிப்பு

காவல்துறை கண்டிப்பு

இவர்கள் தவிர சில இளைஞர் கூட்டம் காலியாக இருக்கும் வீதிகளில் சுற்றித் திரிகிறார்கள். அவர்களை குறி வைத்து காவல்துறை கண்டித்தும், லேசான லத்தி அடி கொடுத்தம் வருகின்றனர். பதிலுக்கு சில இடங்களில் அவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது.

கர்நாடகா சம்பவம்

கர்நாடகா சம்பவம்

கர்நாடகாவில் ஒரு பகுதியில் இளைஞர் கும்பல் ஒன்று வெளியில் சுற்றித் திரிந்தது. அவர்களை காவல்துறையை சேர்ந்த ஒருவர் கண்டித்து இருக்கிறார். அப்போது அந்த கும்பல் அவரை அடித்து, தாக்கி உள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹர்பஜன் சிங் கோபம்

அந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஹர்பஜன் சிங் தன் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். காவல்துறைக்கும் குடும்பம் உள்ளது. அவர்கள் நாட்டுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து பணி புரிந்து வருவதாக தன் ட்விட்டர் பதிவில் கூறி உள்ளார் அவர்.

உயிரை பணயம் வைக்கிறார்கள்

உயிரை பணயம் வைக்கிறார்கள்

ஹர்பஜன் தன் பதிவில், "காவல்துறையின் மீதான நம் மோசமான அணுகுமுறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். நம் உயிரை காக்க அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். அவர்களுக்கும் குடும்பம் உள்ளது" என கூறி உள்ளார்.

கடமை

கடமை

மேலும் அவர், "அதை மீறித் தான் அவர்கள் நாட்டுக்காக தங்கள் கடமையை செய்கிறார்கள். நாளைய சிறப்பான எதிர்காலத்துக்காக நாம் ஏன் வீட்டிலேயே அமர்ந்து இருக்கக் கூடாது" என கேள்வி எழுப்பி உள்ளார் ஹர்பஜன் சிங். காவல்துறை மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.

Story first published: Thursday, March 26, 2020, 20:31 [IST]
Other articles published on Mar 26, 2020
English summary
Harbhajan Singh got anger over mob attacking policemen. He calls for change in attitude.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X