For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்டியாவை மாற்றியது எது? தோனி அண்ணன் சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ச்சியில் ஹர்திக்

ராஜ்காட்: தோனி சொன்ன ஒரு அட்வைஸ் தான் தமது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக மும்பை அணியில் ஹர்திக் இடம்பெறவில்லை. அதன் பிறகு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மோசமான பந்துவீச்சு,

மும்பை அணியிலிருந்து நீக்கம், இந்திய அணியிலிருந்து நீக்கம் என சரிவுக்கு சென்ற ஹர்திக் பாண்டியா, தற்போது ஐபிஎல் கோப்பை, இந்திய அணி கேப்டன் என்ற லெவலுக்கு வளர்ந்துள்ளார்.

ஐசிசி தொடர்கள் ஒளிபரப்பு உரிமை.. பிசிசிஐ பாணியில் அதிரடி.. ஸ்டார், சோனி இடையே கடும் போட்டிஐசிசி தொடர்கள் ஒளிபரப்பு உரிமை.. பிசிசிஐ பாணியில் அதிரடி.. ஸ்டார், சோனி இடையே கடும் போட்டி

நாட்டுக்காக விளையாடுகிறேன்

நாட்டுக்காக விளையாடுகிறேன்

நேற்றைய ஆட்டத்தில் கூட ஹர்திக் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசி அசத்தினார். 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த அவர், தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இது குறித்து பேசிய ஹர்திக், என் நெஞ்சில் நான் அணிந்திருக்க கூடிய இந்த (நாட்டுக்காக) சிம்பிளுக்காக தான் விளையாடுகிறேன். சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும்.

Recommended Video

Hardik Pandya-வை இந்திய அணி கேப்டனாக நியமனம் | *Cricket
தினேஷ் கார்த்திக் ஒரு ஹீரோ

தினேஷ் கார்த்திக் ஒரு ஹீரோ

காலத்திற்கு ஏற்ப நான் சிறந்து விளையாட வேண்டும். தொடர்ந்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். குஜராத் அணிக்காக இதை தான் செய்தேன். இன்றைய இளைஞர்கள் வாழ்க்கைக்கு தினேஷ் கார்த்திக் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார். ஐபிஎல் போட்டியின் போது தினேஷ் கார்த்திக்கை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அவர் அவ்வளவு தான் என்று நினைத்தார்கள்.

தோனி அட்வைஸ்

தோனி அட்வைஸ்

அப்போது உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று தினேஷ் கார்த்திக் கூறினார். தற்போது தனது கடின உழைப்பின் மூலம் இந்திய அணிக்கு திரும்பிவிட்டார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது தோனி கொடுத்த ஒரு அட்வைஸ் தான்.

அணிக்காக விளையாடுங்கள்

அணிக்காக விளையாடுங்கள்

தோனியிடம் ஒரு நாள் சென்று, எப்படி அழுத்தம் இல்லாமல் விளையாடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு தோனி, நமக்காக விளையாடுவதை நிறுத்திவிட்டு அணிக்காக விளையாட வேண்டும். நமது தனிப்பட்ட ஸ்கோரை விட அணியின் ஸ்கோர் தான் முக்கியம் என்று தோனி கூறினார். அந்த அறிவுரை தான் என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியது.

Story first published: Saturday, June 18, 2022, 19:38 [IST]
Other articles published on Jun 18, 2022
English summary
Hardik Pandya reveals one life changing advice from ms dhoni ஹர்திக் பாண்டியாவை மாற்றியது எது? தோனி அண்ணன் சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ச்சியில் ஹர்திக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X