For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த வீரரை பார்த்து கொள்ளுங்கள்.. எதிர்காலத்தில் விராட் கோலியை போல் வருவார்.. ஸ்டோக்ஸ் நம்பிக்கை!

முல்தான்: இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக்ஸ் விராட் கோலியை போல் மூன்று வகையான கிரிக்கெட் வீரராக வருவார் என்று அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு டெஸ்ட் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி, பாகிஸ்தானை தோற்கடித்து. டி20 போட்டியில் விளையாடுவது போல், டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர்.

22 ஆண்டுகள்.. புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து.. சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான்! 22 ஆண்டுகள்.. புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து.. சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான்!

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து அணி, 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

ஹாரி ப்ரூக்ஸ் சதம்

ஹாரி ப்ரூக்ஸ் சதம்

இங்கிலாந்து அணியின் இந்த வெற்றிக்கு, அந்த அணியின் ஹாரி ப்ரூக்ஸ் முக்கிய காரணமாக திகழ்ந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஒரு பக்கம் நங்கீரம் ஊன்றி நின்ற ஹாரி ப்ரூக்ஸ், அதிரடியாக விளையாடி 149 பந்துகளில் 108 ரன்கள் விளாசினார். இவரின் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 355 ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.

பென் ஸ்டோக்ஸ் பேட்டி

பென் ஸ்டோக்ஸ் பேட்டி

இதன் பின்னர் வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், வித்தியாசமான சூழலில், மிகவும் வித்தியாசமாக விளையாடிய ஆட்டம் இது. இந்த இரு ஆட்டங்களிலும் முக்கிய அங்கமாக இருந்ததே அற்புதமான உணர்வுகளை அளிக்கிறது. எங்களின் வெற்றிக்காக விக்கெட்டுகள் தேவைப்பட்ட போது, பிட்சில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீச எளிதாக இருந்தது. ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகியோரோடு, சுழற்பந்துவீச்சாளர்களும் சரியாக பந்துவீசுகின்றனர்.

அப்ராருக்கு வாழ்த்து

அப்ராருக்கு வாழ்த்து

அதேபோல் பாகிஸ்தான் அணியின் அப்ராருக்கு சிறந்த அறிமுக போட்டியாக இருந்தது. அவர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இருப்பினும் அவருக்கு எதிராக எங்களால் ரன்கள் சேர்க்க முடிந்தது. அதேபோல் இங்கிலாந்து அணியில் ப்ரூக்ஸ் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரின் பேட்டிங் டெக்னிக், அனைத்து வகையான கிரிக்கெட்டுக்கும் பொருந்தும்.

விராட் கோலி டெக்னிக்

விராட் கோலி டெக்னிக்

கிட்டத்தட்ட விராட் கோலியை போன்று மிகவும் எளிய டெக்னிக். அந்த எளிய டெக்னிக் தான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் பொருந்திப் போகும். அதேபோல் பிரஷர் சூழல்களில், எதிரணிக்கு பிரஷரை கடத்துவதில் ப்ரூக்ஸ் வல்லவர். இந்த போட்டியில் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க அவரின் சதம் மட்டுமே காரணம் என்று தெரிவித்தார்.

Story first published: Monday, December 12, 2022, 21:16 [IST]
Other articles published on Dec 12, 2022
English summary
England captain Ben Stokes believes that Harry Brooks will become a all-format cricketer like Virat Kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X