For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்.. கபில்தேவ் வரிசையில் இடம்பிடித்த குஷியில் குல்தீப்

By Staff

கொல்கத்தா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருதினப் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ஒருதினப் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் மூன்றாவது இந்திய வீராரானார் குல்தீப்.

ஆனால் இது அவருக்கு மொத்தத்தில் இரண்டாவது ஹாட்ரிக்.

23 வயதாகும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த குல்தீப் யாதவ், 2014ல் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில், ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று எடுத்தது அவருக்கு இரண்டாவது ஹாட்ரிக்.

கபில்தேவுடன் பட்டியலில் சேர்ந்தார்

கபில்தேவுடன் பட்டியலில் சேர்ந்தார்

சர்வதேச ஒருதினப் போட்டியில், ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் மூன்றாவது இந்திய வீரரானார் குல்தீப்.. இதற்கு முன், சேத்தன் சர்மா, நியூசிலாந்துக்கு எதிராக, 1987ல் ஹாட்ரிக் எடுத்தார். ஜாம்பவான் கபில்தேவ், 1991ல் இலங்கைக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

43 முறை ஹாட்ரிக்

43 முறை ஹாட்ரிக்

உலக அளவில் பார்க்கும்போது, இதுவரை, 3800க்கும் மேற்பட்ட ஒருதினப் போட்டிகள் நடந்துள்ளன. அதில், 43 முறை மட்டுமே ஹாட்ரிக் விக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. முதல் ஹாட்ரிக் எடுத்தவர், பாகிஸ்தானின் ஜலால் உத் தின், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1982ல் அவர் ஹாட்ரிக் எடுத்தார். உலகக் கோப்பை போட்டிகளில் முதல் ஹாட்ரிக் எடுத்தவர், சேதன் சர்மா.

மலிங்கா அதிகம்

மலிங்கா அதிகம்

இலங்கையின் வேகப் புயல் லசித் மலிங்கா மட்டுமே இதுவரை மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார். பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், சக்லின் முஷ்டாக், இலங்கையின் சமிந்த வாஸ் ஆகியோர் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்துள்ளனர்.

முதல் மூன்று பந்துகள்

முதல் மூன்று பந்துகள்

குல்தீப் யாதவையும் சேர்ந்து, 6 சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இந்த சாதனையைப் புரிந்துள்ளனர். முதல் மூன்று பந்துகளில் விக்கெட் எடுத்த ஒரே வீரர் சமிந்த வாஸ். அதேபோல லசித் மலிங்கா மட்டுமே, 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இருவகை போட்டிகள்

இருவகை போட்டிகள்

பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் மற்றும் முகம்மது ஷமி ஆகியோர் மட்டும் ஒருதினப் போட்டி மற்றும் டெஸ்ட், என இரண்டிலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, இலங்கையின் லசித் மலிங்கா, திசேரா பெரீரா ஆகியோர், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் ஹாட்ரிக் வீழ்த்தியுள்ளனர்.

இந்த சாதனை வீரர்கள் பட்டியலில் குல்தீப் யாதவும் இணைந்துள்ளார்.

Story first published: Friday, September 22, 2017, 11:10 [IST]
Other articles published on Sep 22, 2017
English summary
Indian Kuldeep Yadav took hat-trick against Austrialis, thrid Indian to do so
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X