For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின விட அவர்தான் சிறந்த கேப்டன், பேட்ஸ்மேன்... இயான் சாப்பல் கருத்து

டெல்லி : முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரைவிட விராட் கோலியே சிறந்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக அவர்கள் மக்களை சந்தித்து வருகின்றனர்.

ஆளே இல்லாத டீமை கூட ஜெயிக்க வைக்கும் ஒரே கேப்டன்.. அந்த லெஜண்டை புகழ்ந்து தள்ளிய பதான்.. அப்ப தோனி?ஆளே இல்லாத டீமை கூட ஜெயிக்க வைக்கும் ஒரே கேப்டன்.. அந்த லெஜண்டை புகழ்ந்து தள்ளிய பதான்.. அப்ப தோனி?

இந்நிலையில், ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ தொகுப்பாளர் ரௌனக் கபூர் டிவிட்டர் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இயான் சாப்பல், பல்வேறு தளங்களில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இயான் சாப்பல் நேர்காணல்

இயான் சாப்பல் நேர்காணல்

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பலுடன், இஎஸ்பிஎன் கிரிக்இன்போ தொகுப்பாளர் ரௌனக் கபூர் டிவிட்டர் மூலம் நேர்காணலில் ஈடுபட்டார். அவரது பல்வேறு கேள்விகளுக்கு இயான் சாப்பல் பதிலளித்தார்.

விராட் கோலியை தேர்ந்தெடுத்த சாப்பல்

விராட் கோலியை தேர்ந்தெடுத்த சாப்பல்

இந்நிலையில், இந்தியாவின் சிறந்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற ரௌனக் கபூரின் கேள்விக்கு பதிலளித்த இயான் சாப்பல், சிறிதும் தயக்கமின்றி சிறந்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக தான் விராட் கோலியையே தேர்வு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

சச்சினை தொடரும் கோலி

சச்சினை தொடரும் கோலி

தன்னுடைய கேரியரில் பல்வேறு சாதனைகளை செய்த சச்சின் டெண்டுல்கரை விராட் கோலி பல விஷயங்களில் பின்பற்றி வருகிறார். அவரது பல சாதனைகளை தொடர்ந்து முறியடித்து வருகிறார். இந்நிலையில், சச்சினை தேர்ந்தெடுக்காமல், விராட் கோலியை சிறந்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக இயான் சாப்பல் தேர்ந்தெடுத்துள்ளார்.

மால்கம் மார்ஷல், வாசிம் அக்ரம்

மால்கம் மார்ஷல், வாசிம் அக்ரம்

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல் அந்த அணிக்காக 75 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது கேப்டன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணி பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளது. இதனிடையே, சர்வதேச அளவில் சிறந்த பௌலராகவும் கேப்டனாகவும் இருந்தவர்களில் சிறப்பானவர்கள் குறித்து கேட்டபோது, மேற்கிந்திய தீவுகளின் மால்கம் மார்ஷல்லையும், பாகிஸ்தானின் வாசிம் அக்ரமையும் அவர் கைகாட்டியுள்ளார்.

Story first published: Friday, May 1, 2020, 16:24 [IST]
Other articles published on May 1, 2020
English summary
Ian Chappell picks Virat Kohli over Sachin Tendulkar as captain & Batsman
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X