For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நச்.. இதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.. செமி பைனலில் இந்திய அணி அளிக்க போகும் சர்ப்ரைஸ்!

இந்த உலகக் கோப்பை தொடரில் இனி நடக்க உள்ள போட்டிகளில் இந்திய அணி இதே பிளேயிங் லெவன் அணியுடன் விளையாட போகிறது என்று செய்திகள் வருகிறது.

லண்டன்: இந்த உலகக் கோப்பை தொடரில் இனி நடக்க உள்ள போட்டிகளில் இந்திய அணி இதே பிளேயிங் லெவன் அணியுடன் விளையாட போகிறது என்று செய்திகள் வருகிறது. அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.

உலகக் கோப்பை தொடர் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அடுத்த வாரம் இதே நாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடக்கும்.

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளது. இந்தியா நியூசிலாந்தை செமி பைனலில் எதிர்கொள்ள போகிறது.

என்ன அணி

என்ன அணி

இந்திய அணி தவான் காயம் காரணமாக விலகிய பின் பெரிய அளவில் சிரமப்பட்டது என்றுதான் கூற வேண்டும். இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரர் தேவை, புதிய மிடில் ஆர்டர் வீரர் தேவை என்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டது. கே எல் ராகுல் தொடக்க வீரராக தொடர்ந்து கஷ்டப்பட்டு வந்தார். சரியாக ரன்களை குவிக்க முடியாமல் திணறினார்.

அணியில் மாற்றம்

அணியில் மாற்றம்

இதனால் மிடில் ஆர்டரும் சிரமத்திற்கு உள்ளானது. அதன்பின் அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அவர் வந்த ராசியோ என்னவோ இந்திய அணியில் எல்லா வீரர்களும் பார்மிற்கு திரும்பினார்கள். முக்கியமாக கே எல் ராகுல் நல்ல பார்மிற்கு திரும்பி உள்ளார். இந்திய அணியின் மிடில் ஆர்டரும் நல்ல பலம் பெற்று உள்ளது.

ஜடேஜா வருகை

ஜடேஜா வருகை

இந்த பலத்தை ஜடேஜா வருகை இன்னும் அதிகப்படுத்தியது என்றுதான் கூற வேண்டும். இந்தியா கண்டிப்பாக ஒரு ஆல் ரவுண்டரை (பாண்டியா) வைத்து சமாளிக்க முடியாது. அதேபோல் ஒரே ஒரு ஸ்பின் பவுலர் அதிக விக்கெட்டுகளை எடுக்கவும் முடியாது. இதனால்தான் அணிக்குள் ஜடேஜா கொண்டு வரப்பட்டார். நேற்று போட்டியில் அவர் ஒரு விக்கெட் எடுத்ததோடு, சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தினர்.

அதே அணி

அதே அணி

இதனால் வரும் செமி பைனல் போட்டியில் இந்திய அணி இதே பிளேயிங் லெவனுடன் விளையாட போகிறது என்று கூறுகிறார்கள். ஆம் அடுத்த போட்டியிலும் இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும். இவர் பவுலிங், பேட்டிங் இரண்டிலும் கலக்குவதால் இந்திய அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஒரு மாற்றம்

ஒரே ஒரு மாற்றம்

ஆனால் குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் நல்ல ஸ்பின் பவுலர் என்றாலும் இங்கிலாந்து பிட்ச் அவருக்கு விக்கெட் எடுக்க போதுமான சூழ்நிலையை தரவில்லை என்றுதான் கூற வேண்டும். அவரால் இந்த தொடரில் சரியாக விக்கெட் எடுக்க முடியவில்லை. ஆனால் சாஹல் தொடர்ந்து நன்றாக பந்து வீசி வருகிறார்.

என்ன அணி

என்ன அணி

இதனால் இந்திய அணியில் மீண்டும் சர்ப்ரைஸ் வரவாக சஹால் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே அணியுடன் இந்தியா தொடர்ந்து விளையாடும் என்று கண்டிப்பாக யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் இந்திய அதைத்தான் செய்ய போகிறது. இந்திய அணியில் தற்போது 8 பேர் வரை நன்றாக பேட்டிங் செய்ய கூடியவர்கள்.

சூப்பர்

சூப்பர்

இனி வரும் போட்டிகளில் களமிறங்க போகும் இந்திய அணியில் கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, பண்ட், பாண்டியா, தோனி, தினேஷ் கார்த்திக், ஜடேஜா, சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, July 7, 2019, 11:03 [IST]
Other articles published on Jul 7, 2019
English summary
ICC World Cup 2019: India locked its playing eleven for the semifinal game against NZ.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X