போன முறையும் இப்படிதான்.. இந்த முறையும் இப்படித்தான்.. ரவி சாஸ்திரிக்கு உதவும் வீடியோ கால்!

ரவி சாஸ்திரியின் தேர்வுக்கு இன்னொரு காரணம்.. கபில் தேவ் மழுப்பல்!

டெல்லி; இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வானதற்கு பின் முக்கியமான செண்டிமெண்ட் காரணம் ஒன்றும் இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கபில் தேவ் தலைமையிலான குழு அவரை தேர்வு செய்துள்ளது.

புள்ளிகள் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் மேலும் இரண்டு வருடங்களுக்கு அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க உள்ளார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் சென்ற முறை அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். பல பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார். 2016ல் இவர் பயிற்சியாளராக தேர்வானார்.

யார் பயிற்சியாளர்

யார் பயிற்சியாளர்

அப்போது பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்துவிட்டு ரவி சாஸ்திரி பாங்காக் சென்றுவிட்டார். அவர் இந்தியாவில் இல்லை. அவரால் அவசரமாக பயிற்சியாளர் நேர்முக தேர்வுக்கு வர முடியவில்லை. இதனால் அப்போது இவரை வீடியோ கால் மூலம் தேர்வுக்குழு கேள்விகள் கேட்டு தேர்வு செய்தது.

இந்திய அணி

இந்திய அணி

இந்த முறை இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதால் நேரடியாக இவரது விண்ணப்பம் பெறப்பட்டது. அதாவது மற்ற நபர்கள் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தாலும், ரவி சாஸ்திரி விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறப்பட்டது. நேரடியாக அவருக்கு நேர்முக தேர்வு மட்டும் நடத்தப்பட்டது.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

இந்த முறை இந்திய அணியுடன் ரவி சாஸ்திரி மேற்கு இந்திய தீவுகளில் இருக்கிறார். அதனால் அவரால் இப்போது நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் ரவி சாஸ்திரி இந்த முறையும் வீடியோ காலில் தோன்றி பதில்களை வழங்கினார். அந்த ராசியோ என்னவோ மீண்டும் அவரே பயிற்சியாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
In both times Ravi Sasthiri elected as the coach of the team via video call only.
Story first published: Friday, August 16, 2019, 19:35 [IST]
Other articles published on Aug 16, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X