தொடர் சாதனைகள்.. ஆண்டு முழுவதும் ரன் மழை.. கோலியுடன் புதிய சாதனை செய்த ரோஹித் சர்மா!

மும்பை : பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கும் இந்திய அணியின் சூப்பர் ஹீரோ ரோகித் ஷர்மா, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலியுடன் இணைந்து இந்த ஆண்டின் குறைந்த ஓவர் போட்டிகளில் 2633 ரன்களை அடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதேபோல கே.எல். ராகுலுடன் இணைந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள், அதாவது 135 ரன்கள் அடித்து, கடந்த ஆண்டின் ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பந்தின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலியை விட கூடுதலாக ஒரு ரன்னை அடித்து 34 பந்துகளில் 71 ரன்களை ரோகித் ஷர்மா குவித்துள்ளார்.

 பல்வேறு சாதனைகளின் சொந்தக்காரர்

பல்வேறு சாதனைகளின் சொந்தக்காரர்

இந்திய அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிவரும் ரோகித் ஷர்மா, பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கி வருகிறார். இதன்மூலம் சர்வதேச அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 இந்தியாவை சாதனையால் நிமிரவைத்தவர்

இந்தியாவை சாதனையால் நிமிரவைத்தவர்

கடந்த உலக கோப்பை தொடரை இந்தியா கைநழுவினாலும், அதில் ரோகித் தன்னுடைய பலத்தை நிரூபிக்க தவறவில்லை. தொடரில் 500 ரன்கள் அடித்ததன் மூலம் அவர் அனைவரது கவனத்தையும் பெற்றார்.

 டி20 போட்டிகளில் 2633 ரன்கள் குவிப்பு

டி20 போட்டிகளில் 2633 ரன்கள் குவிப்பு

இந்நிலையில் 2019ம் ஆண்டிலும் தனது சிறப்பான பேட்டிங் மூலம் ரோகித் ஷர்மா பல சாதனைகளை புரிந்து வருகிறார். இந்த ஆண்டின் இறுதி டி20 போட்டி நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், இதுவரை இந்த ஆண்டில் 2633 ரன்களை அவர் அடித்து சாதனை புரிந்துள்ளார். கோலியும் இந்த ரன்களை எட்டியுள்ளார்.

 34 பந்துகளில் 71 ரன்கள்

34 பந்துகளில் 71 ரன்கள்

தான் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் தேவையை அறிந்து அதை செயல்படுத்தி வரும் ரோகித் ஷர்மா, நேற்றைய போட்டியில் 34 பந்துகளில் 71 ரன்கள் அடித்துள்ளார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸ்கள் அடக்கம். போட்டியில் கோலி 70 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

 135 ரன்களை அடித்து சாதனை

135 ரன்களை அடித்து சாதனை

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 135 ரன்களை ரோகித் ஷர்மா அடித்துள்ளார். கடந்த ஆண்டில் சென்னையில் நடைபெற்ற டி20 போட்டியில் ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பந்த் அடித்த 130 ரன்கள் சாதனையை இந்த இருவர் கூட்டணி முறியடித்துள்ளது.

 சர்வதேச போட்டிகளில் சாதனை

சர்வதேச போட்டிகளில் சாதனை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த டி20 தொடரில் மேலும் ஒரு சாதனையை ரோகித் ஷர்மா நிகழ்த்தியுள்ளார். 400 சிக்ஸ்கள் அடித்த முதல் இந்தியர் என்பதே அந்த சாதனை. கிறிஸ் கெய்ல் மற்றும் ஷாகித் அப்ரிடியை தொடர்ந்து சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது நபராகவும் ரோகித் சர்மா உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Rohit Sharma made records in last T20I Series Against West Indies Team
Story first published: Thursday, December 12, 2019, 16:34 [IST]
Other articles published on Dec 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X