Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்கானிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட்.. இமாலய இலக்கை நோக்கி செல்லும் இந்தியா

ங்களூர்: ஆப்கானிஸ்தானிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அதிரடியாக ஆடி வருகிறது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மிக முக்கியமான நாள். முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி இன்று தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. தனது முதல் போட்டியை அந்த அணி இந்தியாவிற்கு எதிராக ஆடி வருகிறது

IND vs AFG: India Chooses to bat in Bengalure test against Afghanisthan

இந்திய அணியில் தவான், முரளி விஜய், புஜாரா, லோகேஷ் ராகுல், ரஹானே, தினேஷ் கார்த்திக், பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணியில், ஷாஷாத், ஜாவேத், ரஹ்மத், அஸ்கர், அப்சர், முகமது நபி, ஷஹிதி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் , ராமின் அஹமத் சாய், வபாதர் ஆகியோர் உள்ளனர்.

முதலில் களமிறங்கிய தவான் முரளி விஜய் ஜோடி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. தவான் அதிரடியாக 96 பந்தில் 107 ரன்கள் எடுத்தார். இதில் 19 பவுண்டரி மூன்று சிக்ஸர் அடித்தார். முரளி விஜய், 105 ரன்களுக்கும், லோகேஷ் ராகுல் 54 ரன்களுக்கும் அவுட்டானார்கள்.

அதன்பின் ரஹானே, தினேஷ் கார்த்திக், புஜாரா வரிசையாக அவுட்டானார்கள். தற்போது ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் ஆடி வருகிறார்கள். இந்தியா முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டிற்கு 347 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Thursday, June 14, 2018, 19:02 [IST]
Other articles published on Jun 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+