For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு அளவு வேணாமா.. இப்படியா பண்ணுவாங்க? புஜாராவை பார்த்து ஆஸி. வீரர் செய்த காரியம்!

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ வேட், புஜாராவைப் பார்த்து தன் பேட்டிங் பாணியை மாற்றினார்.

ஆனாலும், அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பலரும் ஏன் ஆஸ்திரேலிய அணி இப்படி மாறியது என கேள்வி கேட்டு வருகின்றனர்.

160 பந்துகள்... 43 ரன்கள்... நிதானம் தேவைப்பட்டுச்சு... எந்த வருத்தமும் இல்ல... புஜாரா உறுதி 160 பந்துகள்... 43 ரன்கள்... நிதானம் தேவைப்பட்டுச்சு... எந்த வருத்தமும் இல்ல... புஜாரா உறுதி

இந்த தொடரின் முதல் டெஸ்டிலேயே புஜாரா ஆஸ்திரேலிய அணி மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ப்ரித்வி ஷா 0, மயங்க் அகர்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், புஜாரா - விராட் கோலி கூட்டணி அமைத்து பேட்டிங் செய்தனர்.

ஆமை வேக ஆட்டம்

ஆமை வேக ஆட்டம்

புஜாரா மிகவும் ஆமை வேகத்தில் பேட்டிங் செய்தார். வேகப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசிய போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 20க்கும் கீழே இருந்தது. சுழற் பந்துவீச்சாளர்கள் வந்த பின் அவர் ரன் எடுப்பது போலத் தோன்றினாலும் அப்போதும் அவர் அதிக டாட் பால்களை ஆடி வந்தார்.

கோலி நிதானம்

கோலி நிதானம்

புஜாரா 160 பந்துகளில் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 26.88 மட்டுமே. கேப்டன் விராட் கோலியும் நிதான ஆட்டம் ஆடினார். அவர் 180 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 41.11 ஆகும். இதைக் கூட டெஸ்ட் இன்னிங்க்ஸ் என ஒப்புக் கொள்ளலாம்.

ஆஸி. திட்டம்

ஆஸி. திட்டம்

ஆனால், புஜாரா ஆடிய ஆட்டம் ஆஸ்திரேலிய அணியை சோதித்தது. அந்த அணி புஜாரா ஆட்டத்தை அப்படியே செயல்படுத்த முடிவு செய்து தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை துவங்கி இருந்தது துவக்க வீரர்கள் மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் நிறைய மெய்டன் ஓவர்களை ஆடினார்கள்.

மாற்றிக் கொண்ட மேத்யூ வேட்

மாற்றிக் கொண்ட மேத்யூ வேட்

மேத்யூ வேட் மிடில் ஆர்டர் வீரர் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர். வார்னர் இல்லாத நிலையில் அவரை துவக்க வீரராக ஆட வைக்க முடிவு செய்தது ஆஸ்திரேலிய அணி. அவர் தன் இயல்பை மாற்றி புஜாரா போலவே ஆமை வேகத்தில் ஆடினார்.

கொஞ்சம் ஓவர்

கொஞ்சம் ஓவர்

அதிலும் அவர் சற்று அதிகப்படியாக சென்று 51 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 15.69 மட்டுமே. அவர் எடுத்த 8 ரன்களில் 4 ரன்கள் பவுண்டரி மூலம் வந்தது என்பது தான் இதில் ஆச்சரியம். ஒருவேளை தன் இயல்பான ஆட்டத்தை ஆடி இருந்தால்அவர் கூடுதல் ரன்கள் எடுத்து இருக்கக் கூடும்.

பர்ன்ஸ் என்ன செய்தார்?

பர்ன்ஸ் என்ன செய்தார்?

மற்றொரு துவக்க வீரர் ஜோ பர்ன்ஸ் ஏற்கனவே பார்ம் அவுட்டில் இருக்கும் நிலையில், அவர் 41 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வேட், பர்ன்ஸ் இருவரும் பும்ரா பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி ஆட்டமிழந்தனர்.

Story first published: Friday, December 18, 2020, 13:08 [IST]
Other articles published on Dec 18, 2020
English summary
IND vs AUS : Matthew Wade tried to bat like Pujara
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X