For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி நீங்க ஆடுன வரைக்கும் போதும்.. மூட்டை முடிச்சை கட்டிட்டு கிளம்புங்க.. இளம் வீரருக்கு கல்தா!

சிட்னி : இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் ப்ரித்வி ஷாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.

அவர் தொடர்ந்து சில அடிப்படை தவறுகளை செய்து, விக்கெட்டை விரைவாக இழந்து சொதப்பி வருகிறார்.

கடந்த 10 இன்னிங்க்ஸ்களில் நான்கு டக் அவுட் மற்றும் பல ஒற்றை இலக்க ரன்களை எடுத்துள்ளார்.

டி20 தொடருக்காக காத்துக்கிட்டிருந்தாரு... ஆனா நடந்ததோ வேற... பாபர் குறித்து மிஸ்பா பரிதாபம்! டி20 தொடருக்காக காத்துக்கிட்டிருந்தாரு... ஆனா நடந்ததோ வேற... பாபர் குறித்து மிஸ்பா பரிதாபம்!

ப்ரித்வி ஷா நிலை

ப்ரித்வி ஷா நிலை

இந்திய டெஸ்ட் அணி துவக்க வீரராக ப்ரித்வி ஷா தன் அறிமுகப் போட்டியில் சதம் அடித்தார். ஆனால், அதன் பின் அவர் சொல்லிக் கொள்ளும்படி எந்த போட்டியிலும் ஆடவில்லை. அடுத்த சச்சின், சேவாக் என்றெல்லாம் புகழப்பட்ட அவர் தற்போது மோசமான பார்மில் இருக்கிறார்.

ஐபிஎல் சொதப்பல்

ஐபிஎல் சொதப்பல்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ப்ரித்வி ஷா மிக மோசமாக செயல்பட்டார். முதல் சில போட்டிகளில் ரன் குவித்த அவர் அதன் பின் தொடர்ந்து டக் அவுட், ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வந்தார். சில போட்டிகளில் அவரை நீக்கினார் டெல்லி கேபிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்

அடிப்படை தவறு

அடிப்படை தவறு

ப்ரித்வி ஷா பேட்டிங்கில் அடிப்படை தவறு ஒன்றை செய்து வருகிறார். அதை முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோரும் சுட்டிக் காட்டினாலும் அவர் அதை திருத்திக் கொள்ளவில்லை. தன் கால்களை நகர்த்தாமல் ஷாட் ஆட அவர் முயன்று வருகிறார்.

துவக்க வீரர் வாய்ப்பு

துவக்க வீரர் வாய்ப்பு

ப்ரித்வி ஷா பார்ம் சரியில்லை என்று தெரிந்தும் அவரை ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்தது தேர்வுக் குழு. ரோஹித் சர்மா முதல் சில போட்டிகளில் ஆட மாட்டார் என்பதால் துவக்க வீரராக ப்ரித்வி ஷாவை தேர்வு செய்தனர்.

டெஸ்ட் பயிற்சி

டெஸ்ட் பயிற்சி

அவர் பயற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடினால் போட்டிகளில் இடம் பெறுவார் என கருதப்பட்டது. ஆனால், பயிற்சிப் போட்டிகளிலும் தன் தவறை தொடர்ந்து வருகிறார். இரண்டு பயிற்சிப் போட்டிகளில் நான்கு இன்னிங்க்ஸ்களில் அவர் ஆடி விட்டார்.

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

அவர் பயிற்சிப் போட்டிகளில் 0, 19, 40, 3 ரன்கள் குவித்துள்ளார். ஸ்விங் பந்துவீச்சில் அவர் எளிதாக ஆட்டமிழந்து விடுகிறார். அவர் கால்களை நகர்த்தாமல் ஆடவே முயற்சி செய்கிறார். சேவாக் அப்படித்தான் ஆடுவார். ஆனால், அப்படி ஆடியும் சேவாக் ரன் குவித்தார். ப்ரித்வி ஷா தனக்கு வராத டெக்னிக்கை முயன்று சொதப்பி வருகிறார்.

ஷுப்மன் கில் அபாரம்

ஷுப்மன் கில் அபாரம்

மற்றொரு துவக்க வீரர் ஷுப்மன் கில் பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடினார். ஒரு இன்னிங்க்ஸில் 65 ரன்கள் குவித்தார். அவருக்கு நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அவர் துவக்க வீரராகவோ, மிடில் ஆர்டரிலோ இடம் பெறுவார்.

வாய்ப்பு கிடைக்காது

வாய்ப்பு கிடைக்காது

கேஎல் ராகுலுக்கும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும். அவர் துவக்க வீரராக இறங்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ப்ரித்வி ஷாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே கருதப்படுகிறது. அவருக்கு பல வாய்ப்புக்களை அளித்த நிலையிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

மேலும், ரோஹித் சர்மா கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. அந்த சூழ்நிலையில், அணியில் யாரை நீக்குவது என்ற குழப்பமும் ஏற்படும். எனவே, ப்ரித்வி ஷா நன்றாக ஆடும் வீரர்களை தாண்டி அணியில் இடம் பெற முடியாது.

Story first published: Sunday, December 13, 2020, 13:07 [IST]
Other articles published on Dec 13, 2020
English summary
IND vs AUS : Prithvi Shaw failed to impress Indian team management
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X