ஹாட்ரிக்.. சிறந்த பந்துவீச்சு.. யாருப்பா இவரு? கிரிக்கெட் உலகை மிரள வைத்த தீபக் சாஹர்!

Deepak Chahar breaks 7 year old best ever T20I bowling figures

நாக்பூர் : இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து அசத்தினார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த பந்துவீச்சாளராலும் முறியடிக்க முடியாத சிறந்த பந்துவீச்சு சாதனையை விக்கெட் வேட்டை நடத்தி முறியடித்தார் தீபக் சாஹர்.

மேலும், ஹாட்ரிக் சாதனையும் படைத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார் தீபக் சாஹர்.

மூன்றாவது டி20 போட்டி

மூன்றாவது டி20 போட்டி

இந்தியா - வங்கதேசம் இடையே நடந்த மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் தான் தீபக் சாஹர் இந்த சாதனையை செய்துள்ளார். இந்தப் போட்டியில் வென்றால் தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற கட்டாயத்தில் ஆடியது இந்திய அணி.

அபார பேட்டிங்

அபார பேட்டிங்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 174 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 62, ராகுல் 52 ரன்கள் குவித்தனர். அடுத்து ஆடிய வங்கதேசம் 19.2 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

தீபக் சாஹர் 6 விக்கெட்கள் வீழ்த்தி அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். சிவம் துபே 3, சாஹல் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றது. டி20 தொடரை 2 - 1 என கைப்பற்றி அசத்தியது.

சிறந்த பந்துவீச்சு

சிறந்த பந்துவீச்சு

இந்தப் போட்டியில் தீபக் சாஹர் 3.2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவே மிகச் சிறந்த பந்து வீச்சு ஆகும்.

அஜந்தா மென்டிஸ் சாதனை

அஜந்தா மென்டிஸ் சாதனை

முன்னதாக இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸ் 2012 ஆம் ஆண்டு 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதை முறியடித்து இருக்கிறார் தீபக் சாஹர்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

மேலும், ஹாட்ரிக் சாதனையும் சேர்த்தே செய்து கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளார். இந்திய அளவில் சர்வதேச டி20 போட்டியில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார் தீபக் சாஹர்.

தொடரில் அசத்தல்

தொடரில் அசத்தல்

இந்தப் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்திய தீபக் சாஹர், இந்த டி20 தொடரில் 3 போட்டிகளில் 8 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். மேலும், மிகக் குறைந்த எகனாமியாக 5.41 வைத்திருந்தார்.

தொடர் நாயகன் விருது

தொடர் நாயகன் விருது

தீபக் சாஹர் மூன்றாவது போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் சிறந்த பந்துவீச்சு, எகானமி, ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்த பந்துவீச்சாளர் என்பதால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

பிரபலம்

பிரபலம்

கிரிக்கெட் உலகில் அதிக பிரபலம் இல்லாத தீபக் சாஹர், இந்த ஒரே போட்டியில் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார். போட்டி முடிந்த சில நிமிடங்களில் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனார் தீபக் சாஹர்.

குவிந்த வாழ்த்து

குவிந்த வாழ்த்து

ஐசிசி அமைப்பு முதல் முன்னாள் வீரர்கள் வரை பலரும் அப்போதே பாராட்டு மழையை பொழியத் துவங்கினார்கள். இந்திய அணியின் மறுக்க முடியாத பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார் தீபக் சாஹர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Deepak Chahar breaks 7 year old best ever T20I bowling figures
Story first published: Monday, November 11, 2019, 0:07 [IST]
Other articles published on Nov 11, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X