அந்த சீனியரை கழட்டி விட்டுட்டு.. இவரை எதுக்கு டீம்ல எடுத்தீங்க.. ரசிகர்கள் கடும் விளாசல்!

IND vs BAN : Fans slam Krunal Pandya comparing with senior Ravindra Jadeja

டெல்லி : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் இவர் தான் என ஒரு வீரரை சுட்டிக் காட்டி விமர்சித்து வருகிறார்கள் இந்திய ரசிகர்கள்.

அந்த வீரர் க்ருனால் பண்டியா. பேட்டிங்கில் ஓரளவு கை கொடுத்த அவர், பந்துவீச்சில் பெரிதாக கை கொடுக்கவில்லை. அவர் பீல்டிங்கில் செய்த தவறுக்காக கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

ஜடேஜாவை நீக்கி விட்டு, இவரை அணியில் வைத்துக் கொண்டது இந்திய அணி. அதற்கான பலனை அணி அனுபவிப்பதாக கூறி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கேட்ச் நழுவல்

கேட்ச் நழுவல்

முக்கியமான நேரத்தில் எளிதான கேட்ச் ஒன்றை நழுவ விட்டார் க்ருனால் பண்டியா. அது தான் பெரிய சிக்கலாக மாறியது. ஜடேஜா அணியில் இருந்தால் இது போன்ற கேட்ச்சை நழுவ விட்டிருப்பாரா? என ரசிகர்கள் விமர்சித்தனர்.

அணித் தேர்வு

அணித் தேர்வு

வங்கதேச தொடருக்கான அணித் தேர்வின் போது சாஹலுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்தது இந்திய அணி. அதனால், க்ருனால் பண்டியா அல்லது ஜடேஜா இருவரில் ஒருவரை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜடேஜா நீக்கம்

ஜடேஜா நீக்கம்

அப்போது க்ருனால் பண்டியாவுக்கு அதிக அனுபவம் தேவை என்ற முடிவு எடுத்து, அனுபவ வீரர் ஜடேஜாவை நீக்கியது தேர்வுக் குழு. ஜடேஜா உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், தென்னாப்பிரிக்கா தொடர் என அனைத்திலும் சிறப்பாக ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. தவான் 41, ரிஷப் பண்ட் 27, ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்கள் எடுத்தனர்.

நல்ல ஸ்கோர்

நல்ல ஸ்கோர்

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்தது. டெல்லி ஆடுகளத்தில் இது நல்ல ஸ்கோர் தான் என்றாலும், சேஸிங்கில் வங்கதேசம், இந்திய அணிக்கு சவால் விட்டது.

ரஹீம் அசத்தல் பேட்டிங்

ரஹீம் அசத்தல் பேட்டிங்

அந்த அணியின் முஷ்பிகுர் ரஹீம் பல முறை விக்கெட் இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பி 60 ரன்கள் குவித்தார், தன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

கேட்ச் வாய்ப்பு

கேட்ச் வாய்ப்பு

v

நழுவ விட்டார்

நழுவ விட்டார்

ரஹீம் கொடுத்த எளிதான கேட்ச்சை பவுண்டரி கோட்டுக்கு அருகே இருந்த க்ருனால் பண்டியா நழுவ விட்டார் பந்து பவுண்டரிக்கு சென்றது. அடுத்த ஓவரில் நான்கு பவுண்டரி அடித்து போட்டியை இந்திய அணியிடம் இருந்து தட்டிப் பறித்தார் ரஹீம்.

க்ருனால் பண்டியா மீது கோபம்

க்ருனால் பண்டியா மீது கோபம்

அதனால், ரசிகர்கள் க்ருனால் பண்டியா மீது கோபம் கொண்டனர். ஜடேஜா போன்ற மூத்த அனுபவ வீரரை நீக்கி விட்டு க்ருனால் பண்டியாவை அணியில் சேர்த்ததன் விளைவு தான் இது என கடுமையாக விமர்சித்தனர்.

ஜடேஜா பீல்டிங்

ஜடேஜா பீல்டிங்

ஜடேஜா உலக அளவில் சிறந்த பீல்டராக விளங்கி வருகிறார். அப்படி ஒரு வீரர் இருந்திருந்தால் இது போன்ற எளிய கேட்ச்களை நழுவ விட்டிருப்பபாரா எனவும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Fans slam Krunal Pandya comparing with senior Ravindra Jadeja
Story first published: Monday, November 4, 2019, 18:24 [IST]
Other articles published on Nov 4, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X