For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிலையன்ஸ் முனை.. அதானி முனை.. நரேந்திர மோடி மைதானத்தில் "எண்ட்களுக்கு" வைக்கப்பட்ட பெயர்.. வைரல்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் மூன்றாவது டெஸ்ட் நடந்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் மைதானத்தின் இரண்டு முனைகளுக்கும் அதானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 4 விக்கெட்டை இழந்துள்ளது.

இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. அக்சர் பட்டேல் அதிரடியாக 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள மோதேரா மைதானத்தில் இந்த ஆட்டம் நடந்து வருகிறது.

 எப்படி

எப்படி

உலகிலேயே இதுதான் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும். இங்கு இன்று நடக்கும் முதல் போட்டியே பிங்க் பால் போட்டியாகும். உலகிலேயே பெரிய மைதானத்தில் நடப்பதால் இதனால் இந்த ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

புனரமைப்பு

புனரமைப்பு

புனரமைப்பு பணிகளுக்கு பின் புது பொலிவுடன் இந்த மோதேரா மைதானம் இன்று திறக்கப்பட்டது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் திறக்கப்பட்டது. இந்த மோதேரா மைதானத்திற்கு முன்பு சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது .இந்த நிலையில் மோதேரா மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

 மோடி

மோடி

இன்று மைதானம் திறக்கப்பட்ட நிலையில் அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் (Reliance End) என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மற்றொரு முனை அதானி (Adani End) என்று பெயரிடப்பட்டுள்ளது.

பெயர் எப்படி

பெயர் எப்படி

இரண்டும் பவுலிங் போடும் முனைகள் ஆகும். அதேபோல் இருக்கைகள் இருக்கும் ஸ்டாண்ட்களும் ரிலையன்ஸ், அதானி நிறுவனங்களின் பெயர்களை கொண்டு இருக்கிறது. இந்த முனைகளுக்கு இப்படி பெயர் வைக்கப்பட்டு இருப்பது பெரிய வைரலாகி உள்ளது. இணையத்தில் பலரும் இதை விவாதம் செய்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, February 24, 2021, 22:25 [IST]
Other articles published on Feb 24, 2021
English summary
Ind vs Eng: Bowling Ends named as Adani end and Reliance end in Narendra Modi Ground at Ahmedabad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X