For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகமகா சாதனை! வாயை பிளக்க வைத்த அஸ்வின்.. உலகின் சிறந்த டெஸ்ட் பவுலரை காலி செய்தார்!

Recommended Video

R Ashwin celebrates a special number | உலக சாதனை செய்து வியக்க வைத்த அஸ்வின்-வீடியோ

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் முக்கிய சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 350 விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் அஸ்வின் முத்தையா முரளிதரனுடன் இணைந்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அதே சமயம், முத்தையா முரளிதரனை விட ஒரு வகையில் சிறந்த சாதனை செய்து வாயை பிளக்க வைத்துள்ளார் அஸ்வின்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. முன்னதாக முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 502 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களும் குவித்தன.

முதல் இன்னிங்க்ஸ் விக்கெட்கள்

முதல் இன்னிங்க்ஸ் விக்கெட்கள்

முதல் இன்னிங்க்ஸ் பந்துவீச்சில் அஸ்வின் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் தன் 27வது 5+ விக்கெட் வீழ்ச்சியை பதிவு செய்தார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்களை எடுத்து இருந்தார்.

எட்டாவது விக்கெட்

எட்டாவது விக்கெட்

போட்டியின் கடைசி நாளில், இரண்டாம் இன்னிங்க்ஸில் அவர் ப்ரூன் விக்கெட்டை வீழ்த்தினார். ப்ரூன் 10 ரன்கள் எடுத்து இருந்த போது பவுல்டு அவுட் செய்தார் அஸ்வின். இந்த விக்கெட் அஸ்வினின் 350வது டெஸ்ட் விக்கெட் ஆகும்.

சாதனை சமன் செய்தார்

சாதனை சமன் செய்தார்

350 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்தார். இருவரும் 66 போட்டிகளில் 350 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர். விரைவாக 350 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.

ஓவர்களில் யார் முன்னணி?

ஓவர்களில் யார் முன்னணி?

எனினும், ஓவர்கள் எண்ணிக்கை படி பார்த்தால் முரளிதரன் 3605.2 ஓவர்களில் தான் 350 விக்கெட்களை எட்டி இருக்கிறார். அஸ்வின் 3200க்கும் குறைவான ஓவர்கள் வீசிய நிலையிலேயே 350 விக்கெட்களை எட்டி இருக்கிறார்.

இந்திய அளவில்..

இந்திய அளவில்..

உலக அளவில் முதல் இடத்தை பிடித்த அஸ்வின், இந்திய அளவில் அனில் கும்ப்ளேவை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக அனில் கும்ப்ளே 77 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

சிறந்த ஸ்பின்னர் அஸ்வின்

சிறந்த ஸ்பின்னர் அஸ்வின்

இந்த சாதனைக்குப் பின் பார்க்கும் போது, தற்போது உலகில் ஆடி வரும் சுழற் பந்துவீச்சாளர்களில் அஸ்வின் தான் சிறந்த சுழற் பந்துவீச்சாளர். குறைந்த போட்டிகளில் ஆடி, அதிக விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருக்கிறார் அஸ்வின்.

டெஸ்ட் அணி மட்டுமே

டெஸ்ட் அணி மட்டுமே

ஆனால், அஸ்வினின் கிரிக்கெட் பயணம் அத்தனை நல்லவிதமாக இல்லை என்பதே உண்மை. ஜூலை 2017 முதல் அஸ்வின் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று வருகிறார். கடந்த ஆண்டில் அதற்கும் காயம் காரணமாக சிக்கல் வந்தது.

கடைசி டெஸ்ட் எப்போது?

கடைசி டெஸ்ட் எப்போது?

கடைசியாக டிசம்பர் 2018இல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடி இருந்தார் அஸ்வின். அதன் பின் கடந்த மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்..

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்..

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலேயே அஸ்வின், முரளிதரன் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Story first published: Sunday, October 6, 2019, 11:20 [IST]
Other articles published on Oct 6, 2019
English summary
IND vs SA : Ashwin achieved a blastering record by equalling Muralitharan test record. Both spinners reached 350 wickets in their 66th match and sharing the first spot in that list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X