For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க 2 பேரும் இல்லை.. புவனேஸ்வர் குமாரை மட்டுமே நம்பி இருக்கும் இந்திய அணி!

Recommended Video

Buvaneshwar Kumar : எல்லாம் இளம் வீரர்கள்.. இவரை நம்பித்தான் இந்தியா அணி- வீடியோ

ப்ளோரிடா : அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரை நம்பித் தான் உள்ளது.

வரும் ஆகஸ்ட் 3 முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அதன் பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதற்கான அணி சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. டி20 அணியில் முக்கிய பந்துவீச்சாளராக புவனேஸ்வர் குமார் இடம் பெற்றார்.

அணித் தேர்வு

அணித் தேர்வு

டி20 அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது, தீபக் சாஹர் மற்றும் நவ்தீப் சைனி தேர்வு செய்யப்பட்டனர். 2020 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து அணியில் அதிக இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பும்ரா, ஷமி இல்லை

பும்ரா, ஷமி இல்லை

இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களாக இருக்கும் பும்ரா, முகமது ஷமி டி20 அணியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அனுபவம் அதிகம்

அனுபவம் அதிகம்

அதே சமயம், அணியின் சம நிலையை சரியாக வைத்துக் கொள்ள அனுபவ வீரர் புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். எப்போதும் பும்ரா அல்லது ஷமியுடன் இணைந்து பந்துவீசி வந்த புவனேஸ்வர் குமார் தற்போது இளம் வீரர்களுடன் பந்து வீச உள்ளார்.

வழிநடத்த வேண்டும்

வழிநடத்த வேண்டும்

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இடம் பெற்றுள்ள மற்ற இளம் வேகப் பந்துவீச்சாளர்களை புவனேஸ்வர் குமார் வழிநடத்திச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். அடுத்த மூன்று டி20 போட்டிகளுக்கு அவர் தான் வேகப் பந்துவீச்சில் "ரூட்டு தல".

மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்

மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்

டி20 போட்டிகளில் இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வர் குமாருடன், கலீல் அஹ்மது நிச்சயம் மூன்று போட்டிகளிலும் ஆடுவார். நவ்தீப் சைனி, தீபக் சாஹர் இருவரும் மாற்றி, மாற்றி அணியில் வாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் அணியில் இல்லை

டெஸ்ட் அணியில் இல்லை

டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள புவனேஸ்வர் குமார், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் அணியில் வேகப் பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். புவனேஸ்வர் குமார் பந்தை அதிகம் ஸ்விங் செய்வார் என்று கூறப்பட்டாலும், அவரால் அதிக விக்கெட்கள் வீழ்த்த முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 1, 2019, 15:03 [IST]
Other articles published on Aug 1, 2019
English summary
IND vs WI 2019 : Except Bhuvneshwar Kumar all are inexperienced bowlers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X