முக்கிய வீரர் காயம்.. ஒருநாள் தொடரில் சிக்கல்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வெளியான ரகசியம்!

சென்னை : இந்திய அணியில் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரில் தான் புவனேஸ்வர் குமார் காயம் அடைந்தார் என கூறப்படுகிறது.

ஒருநாள் தொடர் இன்னும் இரு நாட்களில் துவங்க உள்ள நிலையில், இந்த விஷயத்தை இந்திய அணி மூடி வைத்துள்ளது.

புவனேஸ்வரும் காயமும்!

புவனேஸ்வரும் காயமும்!

புவனேஸ்வர் குமார் கடந்த இரு ஆண்டுகளாகவே அதிகமாக காயத்தில் சிக்கி வருகிறார். 2018ஆம் ஆண்டில் முக்கியமான இங்கிலாந்து தொடரில் காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் பங்கேற்க முடியாமல் போனது.

உலகக்கோப்பை தொடரில்..

உலகக்கோப்பை தொடரில்..

2௦19 உலகக்கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல்-க்கு முன்பு கூட புவனேஸ்வர் குமார் காயத்தில் தான் இருந்தார். பின்னர் ஐபிஎல்-இல் ஆடிய அவர், உலகக்கோப்பை தொடரின் இடையே காயத்தால் பாகிஸ்தான் போட்டியில் பாதியில் வெளியேறினார்.

பங்கேற்கவில்லை

பங்கேற்கவில்லை

பின் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆடினார் புவனேஸ்வர். அதன் பின் இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை.

காயம் குறித்த மர்மம்

காயம் குறித்த மர்மம்

புவனேஸ்வருக்கு எந்த மாதிரியான காயம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி மர்மம் நீடித்தது. பலரும் அவரது காயத்தை இந்திய அணி நிர்வாகம் சரியாக கையாளவில்லை என புகார் கூறினர்.

மீண்டும் அணிக்கு திரும்பினார்

மீண்டும் அணிக்கு திரும்பினார்

இதனிடையே, காயம் குணமானதாக கூறப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெற்றார் புவனேஸ்வர். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடிய அவர், அதிக விக்கெட்கள் வீழ்த்தாவிட்டாலும், பந்துவீச்சில் அணியை வழிநடத்தினார்.

மீண்டும் காயம்

மீண்டும் காயம்

இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டியின் போது அவர் காலில் காயம் ஏற்பட்டதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. அது சாதாரணமான ஒன்றாக இருக்கலாம் என நினைத்த நிலையில், அந்த காயத்தால் அவர் சில காலம் ஓய்வில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒருநாள் தொடரில் சிக்கல்

ஒருநாள் தொடரில் சிக்கல்

அவரது காயத்தின் தன்மை குறித்த தகவலை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை. ஒருவேளை அவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட வைத்தால் காயம் பெரிதாக வாய்ப்பு இருக்கிறது.

நீக்கப்படுவாரா?

நீக்கப்படுவாரா?

அதனால், புவனேஸ்வர் குமார் நிச்சயம் ஒருநாள் தொடரில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. அவரை அணியில் இருந்து நீக்கும் அறிவிப்பை கடைசி நேரத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அவரை விட்டால், ஷர்துல் தாக்குர், கலீல் அஹ்மது ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

பும்ரா காயம்

பும்ரா காயம்

மற்றொரு முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ராவும் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவர் வலைப் பயிற்சியில் இந்திய அணிக்கு பந்து வீசி வருகிறார். எனினும், அவர் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Bhuvneshwar Kumar injury kept secret by Indian team management says reports.
Story first published: Friday, December 13, 2019, 18:34 [IST]
Other articles published on Dec 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X