For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படியே போய்க்கிட்டு இருந்தா டீம்ல இருந்து கழட்டி விட்ருவாங்க.. தமிழக வீரருக்கு வார்னிங்!

திருவனந்தபுரம் : இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தரின் பந்து வீச்சு கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு இப்போதிருந்தே வீரர்களை தேர்வு செய்து வரும் நிலையில், வாஷிங்க்டன் சுந்தர் அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் டி20 போட்டிகளில் விக்கெட் வேட்டை நடத்தாவிட்டால் அடுத்த தொடரில் அவர் இடம் பெறுவது கேள்விக் குறியாக வாய்ப்பு உள்ளது.

2020 டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பை அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் பணியில் 50 ஓவர் உலகக்கோப்பை முடிந்த உடன் இறங்கியது இந்திய அணி.

அணியில் வாஷிங்க்டன் சுந்தர்

அணியில் வாஷிங்க்டன் சுந்தர்

அப்போது முதல் இந்திய டி20 அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார் தமிழகத்தை சேர்ந்த ஆல் - ரவுண்டர் வாஷிங்க்டன் சுந்தர். இந்திய அணியில் முக்கிய சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவராக ஆடி வருகிறார்.

சிறந்த பவர்பிளே பந்துவீச்சாளர்

சிறந்த பவர்பிளே பந்துவீச்சாளர்

குறிப்பாக, பவர்பிளே ஓவர்களில் பந்து வீசுவதில் கைதேர்ந்தவராக விளங்கியதால் கேப்டன் விராட் கோலி, சுந்தருக்கு தொடர்ந்து பவர்பிளே ஓவர்களில் பந்து வீச வாய்ப்பு அளித்து வந்தார்.

வெ.இண்டீஸ் முதல் டி20

வெ.இண்டீஸ் முதல் டி20

தற்சமயம் நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடிய வாஷிங்க்டன் சுந்தர் 3 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் வீழ்த்தினார். அது இந்த ஆண்டில் அவரது மோசமான பந்துவீச்சாக அமைந்தது.

அதிக ரன்கள் கொடுக்கிறார்

அதிக ரன்கள் கொடுக்கிறார்

2019ஆம் ஆண்டில் வாஷிங்க்டன் சுந்தர் அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஸ்ட்ரைக் ரேட் மற்றும் பந்துவீச்சு சராசரி ஆகியவற்றில் அவரது செயல்பாடுகள் மோசமாக உள்ளது.

ஸ்ட்ரைக் ரேட் அதிகம்

ஸ்ட்ரைக் ரேட் அதிகம்

டெஸ்ட் போட்டிகளில் ஆடும் நாடுகளில் டி20 போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள பந்துவீச்சாளர்களில் சுந்தர் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 45 ஆகும்.

பந்துவீச்சு சராசரி

பந்துவீச்சு சராசரி

ஒரே ஆண்டில் நான்கு விக்கெட்கள் அல்லது அதற்கும் மேல் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக பந்துவீச்சு சராசரி கொண்டுள்ள பந்துவீச்சாளராக இருக்கிறார் வாஷிங்க்டன் சுந்தர். அவரது சராசரி 54.25 ஆகும். இஷாந்த் சர்மா 47.16 சராசரியுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

குறைவான விக்கெட்கள்

குறைவான விக்கெட்கள்

இந்த ஆண்டு மட்டும் வாஷிங்க்டன் சுந்தர் 9 போட்டிகளில் 30 ஓவர்கள் பந்துவீசி அதில் 4 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். இதுவும் அவருக்கு சிக்கலாக அமைந்துள்ளது.

கோலி நம்பிக்கை

கோலி நம்பிக்கை

எனினும், தற்போது வரை கேப்டன் கோலி வாஷிங்க்டன் சுந்தர் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பது அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் அளித்த பேட்டியிலேயே தெரிந்தது. அவர் கூறுகையில், ஜடேஜா, சுந்தருடன் மூன்றாவதாக ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் அணிக்கு தேவை என்று கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்

எனினும், இந்திய அணியில் எப்போது வேண்டுமானாலும் வீரர்கள் நீக்கப்படலாம் என்பதே நடைமுறை. தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில், அந்தப் போட்டிகளில் அவர் சிறப்பாக விக்கெட்கள் வீழ்த்தினால் அவர் தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பதை யாராலும் மறுக்க முடியாது.

Story first published: Sunday, December 8, 2019, 17:16 [IST]
Other articles published on Dec 8, 2019
English summary
IND vs WI : Washington Sundar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X