For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs WI : ஜாதவ், துபேவை டீமை விட்டு தூக்குங்க.. புது மாப்பிள்ளைக்கு சான்ஸ் கொடுங்க!

Recommended Video

India vs West Indies 2nd ODI | India sets target of 388 runs to W Indies

விசாகப்பட்டினம் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் புது மாப்பிள்ளை மனிஷ் பாண்டேவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து தொடரில் 0 - 1 என பின் தங்கி உள்ளது.

வெற்றிகள் தேவை

வெற்றிகள் தேவை

அடுத்து நடக்க உள்ள இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில், அணியில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கேப்டன் கோலி.

மனிஷ் பாண்டே திருமணம்

மனிஷ் பாண்டே திருமணம்

இந்திய அணியில் உலகக்கோப்பை தொடருக்கு பின் தொடர்ந்து இடம் பெற்று வரும் மனிஷ் பாண்டே, வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கு இரு தினங்கள் முன்பு திருமணம் செய்து கொண்டார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

திருமணத்துக்கு முன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஆடிய அவர், அதன் பின் டி20 அணியில் இடம் பெற்றாலும், போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை. அவர் மாற்று வீரராக, ஓய்வு எடுக்கச் செல்லும் வீரர்களுக்கு மாற்றாக பீல்டிங் மட்டுமே செய்து வந்தார்.

முதல் ஒருநாள் போட்டி சொதப்பல்

முதல் ஒருநாள் போட்டி சொதப்பல்

டி20 தொடரில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் களமிறங்கவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா நான்கு முழு நேர பந்துவீச்சாளர்களுடன், இரண்டு ஆல் - ரவுண்டர்களை பகுதி நேர பந்துவீச்சாளர்களாக களமிறக்கியது.

5வது பந்துவீச்சாளர் தேவை

5வது பந்துவீச்சாளர் தேவை

சிவம் துபே, கேதார் ஜாதவ் இருவரும் பகுதி நேர பந்துவீச்சில் சொதப்பவே இந்தியாவுக்கு ரன்களை கட்டுப்படுத்துவதில் கடும் சிக்கல் எழுந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா நிச்சயம் 5வது முழு நேர பந்துவீச்சாளரை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங் பலமாக வேண்டும்

பேட்டிங் பலமாக வேண்டும்

ஐந்தாவது பந்துவீச்சாளரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால், ஒன்று அல்லது இரண்டு ஆல் - ரவுண்டர்களை அணியை விட்டு நீக்க வேண்டும். அப்படி செய்தால் பேட்டிங் பலவீனம் ஆகும். எனவே, அதையும் கோலி கருத்தில் கொள்வார்.

ஜாதவ் நீக்கம்

ஜாதவ் நீக்கம்

நிச்சயம் கேதார் ஜாதவ் இரண்டாவது போட்டியில் களமிறங்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. அவரை நீக்கி விட்டு, சாஹல் அல்லது ஷர்துல் தாக்குர் அணியில் இடம் பெறலாம்.

மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு

மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு

முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சில் சொதப்பிய அதிரடி ஆல் - ரவுண்டர் சிவம் துபேவையும் நீக்கி விட்டு மனிஷ் பாண்டேவை அணியில் சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Wednesday, December 18, 2019, 12:28 [IST]
Other articles published on Dec 18, 2019
English summary
IND vs WI : Will Manish Pandey get chance to play in second ODI?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X