For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'துணிவு' இருந்ததால் கபில்தேவின் 'வாரிசு' ஆன ஹர்திக்.. இனி இந்தியாவின் எதிர்காலம் ஹர்திக்.. விவரம்

மும்பை : இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில்தேவ்க்கு என்று தனி இடம் எப்போதும் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவை காமெடி பீசாக மேலை நாடுகள் நினைத்த போது, உலக கோப்பையை வென்று சம்பவம் செய்தார்.

கபில்தேவ் கனவு கண்டது மட்டும் அல்லாமல், தன் கூட இருந்தவர்களுக்கும், தன் கனவை ஊட்டினார். வெற்றி பெற வேண்டும் என்று வெறியை ஏற்படுத்தினார்.

நம்பிக்கையுடன் விளையாடி போராடினால் வெற்றி கிடைக்கும் என்று உலகிற்கு எடுத்து உரைத்தார். அதே பாணியை தான் கங்குலியும் மேற்கொண்டார்.

முன்னாள் கேப்டன்கள்

முன்னாள் கேப்டன்கள்

இன்னும் சொல்லப் போனால், நீ என்னை இரண்டு அடி அடித்தால், நான் உன்னை நான்கு அடி அடிப்பேன் என்ற பாணியை இந்திய அணிக்குள் கொண்டு வந்தார். இதன் மூலம் அந்நிய மண்ணில் வெற்றிகள், உலககோப்பை இறுதி சுற்று போன்ற வாய்ப்பு கிடைத்தது. மேலும், அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியையும் செய்தார். இவர்களை விட எல்லாம் சற்று வித்தியாசமானவர் தோனி.

கோலிக்கான அங்கீகாரம்

கோலிக்கான அங்கீகாரம்

கிரிக்கெட்டை அறிவுப்பூர்வமாக செஸ் போட்டியை போல் விளையாடினார். சரியான விசயத்தை தொடர்ந்து செய்தால், வெற்றி கிடைக்கும் என நம்ப வைத்தார் தோனி. அதன் பிறகு கோலி ஆக்ரோஷ கேப்டனாக இருந்து, நம்பர் 1 டெஸ்ட் அணியாக இந்தியாவை கொண்டு வந்தாலும், ஒலிம்பிக்கில் ஓடி வென்றால் மட்டுமே எப்படி தங்கத்துக்கு மதிப்பு கிடைக்குமோ, அதே போல் கோலியின் கேப்டன்ஷியை அங்கீகரிக்க ஐசிசி கோப்பை எதுவும் இல்லை.

ஹர்திக் ஸ்டைல்

ஹர்திக் ஸ்டைல்

இந்த நிலையில், ரோகித் சர்மா களத்தில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, தொடர் வெற்றிகளை குவித்தாலும், முக்கியமான உலககோப்பை தொடரில் சறுக்கினார், இந்த இடத்தில் தான் அனைவரின் கவனத்தையும் கேப்டனாக பெறுகிறார் ஹர்திக் பாண்டியா. கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை என்பது போல் கபில்தேவ் பாதி, தோனி, கங்குலி பாதி என்று கலந்து அடிக்கிறார் ஹர்திக் பாண்டியா.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

என்ன பா.. வெறும் 2 தொடரை வைத்து முடிவு செய்றீங்க என்று நீங்கள் கேட்கலாம். எப்போ வந்தோம்னு முக்கியம் இல்ல, புல்லட் எப்படி இறங்குது தானு முக்கியம் என்று போக்கிரி விஜய் சொல்வது போல் ஹர்திக் பாண்டியா, எத்தனை தொடரில் கேப்டனாக இருந்தார் என்பது முக்கியமல்ல, எப்படி கேப்டனாக நடந்து கொண்டார் என்பதை தான் பார்க்க வேண்டும். பொங்கல் , வடைபாவ் சாப்பிட்டு களத்தில் தூங்காமல், சிறுத்தை குட்டி போல் செயல்படுகிறார் ஹர்திக் பாண்டியா.

ஹர்திக்கின் மாஸ் கேப்டன்ஷி

ஹர்திக்கின் மாஸ் கேப்டன்ஷி

முக்கியமாக,பேட்ஸ்மேனக்கும் பந்து வீச தெரிய வேண்டும்.. சீக்கிரம் கற்று கொள்ளுங்கள். பேட்ஸ்மேன் மட்டுமல்ல பந்துவீச்சாளர்களும் போர் குணத்துடன் செயல்பட வேண்டும் என்று சொல்வதும், களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு, நீ கடைசி வரை ஆட்டமிழக்காமல் இரு, மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சீனியர் வீரர்களுக்கே பாடம் எடுப்பதாக இருக்கட்டும், கேப்டனாக ஹர்திக் பிண்ணி பிடேல் எடுக்கிறார்.

அடுத்த வாரிசு

அடுத்த வாரிசு

கேப்டன் என்பவன், தாம் மட்டும் அல்லாமல், தன் அணியையும் சேர்த்து தனது குறிக்கோளை நோக்கி அழைத்து செல்ல வேண்டும். அதனை பாண்டியா ஐபிஎல் தொடரில் குஜராத் அணியுடனும், 2 தொடர்களில் கேப்டனாகவும் சிறப்பாக செய்துள்ளார். பேட்டிங்கில் அணி சொதப்பினால், பேட்ஸ்மேனாக கபில்தேவ் போல் நின்று அடித்தும் ஆடுகிறார். பந்துவீச்சிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஹர்திக் பாண்டியாவின் இந்த துணிவு தான், அவரை கபில்தேவின் வாரிசு ஆக்க போகிறது.

Story first published: Tuesday, November 22, 2022, 20:30 [IST]
Other articles published on Nov 22, 2022
English summary
India atlast find the successor for Kapil dev in the form of hardik pandya 'துணிவு' இருந்ததால் கபில்தேவின் 'வாரிசு' ஆன ஹர்திக்.. இனி இந்தியாவின் எதிர்காலம் ஹர்திக்.. விவரம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X