For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்படுவார்.. முன்னாள் வீரர் கொடுத்த எச்சரிக்கை.. என்ன விஷயம்

மும்பை : தனது தவறுகளை ரிஷப் பண்ட் திருத்திக் கொள்ளவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் ,தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளையாடி வருவதால் ரிஷப் பண்டை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரிஷப் பண்ட் vs தினேஷ் கார்த்திக்

ரிஷப் பண்ட் vs தினேஷ் கார்த்திக்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் தனது திறமையை நிரூபிக்க சிறப்பான வாய்ப்பு அமைந்தது. ஆனால் அவர் 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு சிக்ஸர் 3 பவுண்டரிகள் அடங்கும். எனினும் அவர் முக்கிய கட்டத்தில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் 21 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்கள் குவித்து தனது இடத்தை மீண்டும் உறுதி செய்தார்.

அஜய் ஜடேஜா கருத்து

அஜய் ஜடேஜா கருத்து

இதுகுறித்து பேசிய அஜய் ஜடேஜா, ரிஷப் பண்ட்க்கு கிடைத்த வாய்ப்பை அவர் தவற விட்டு விட்டார். அவர் ரொம்ப எல்லாம் மெனக்கிட தேவையில்லை. அவருடைய சக வீரரான தினேஷ் கார்த்திகை பார்த்தாலே அவர் நிறைய கற்றுக் கொள்வார். தினேஷ் கார்த்திக் மீது இந்திய அணி நிர்வாகம் நம்பிக்கை கொள்ள 15 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு பலமுறை வந்திருக்கிறார்.ஆனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உதவி கேளுங்கள்

உதவி கேளுங்கள்

எதிர்பார்த்த செயல்பாடுகளை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படுவீர்கள். இதனால் ரிஷப் பண்ட்டிற்கும் அந்த நிலைமை ஏற்படும். ஆனால் அதற்கு முன் அவர் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். ரிஷப் பண்ட், சக வீரர்களிடையே பேச வேண்டும். அவர்களிடம் சென்று நான் என்ன தவறு செய்கிறேன் என்று நீங்கள் கூறுங்கள்.. பேட்டிங்கில் நான் எந்த வகையில் மாற்றம் கொள்ள வேண்டும் என கேட்க வேண்டும்.

திறமைக்கு பஞ்சமில்லை

திறமைக்கு பஞ்சமில்லை

ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இடமே இதை பற்றி கேட்கலாம். நீங்கள் எப்படி உங்கள் குறைகளை நிவர்த்தி செய்தீர்கள் என்று அவரிடம் அறிவுரை கேட்டு பெறலாம். ரிஷப் பண்ட் உடைய பெரிய ரசிகனாக இருந்தாலும் அவர் இதுபோல் விளையாடினால் எவ்வளவு காலம்தான் அவர் பொறுத்துக் கொள்வார். பண்டிடம் அபாரமான திறமைகள் இருக்கின்றன அவருடைய திறமைக்கு எந்த குறையும் இல்லை. டி20 கிரிக்கெட்டில் மட்டும் தான் ரிஷப் பண்ட் இப்படி தடுமாறுகிறார்.

Story first published: Friday, October 7, 2022, 21:11 [IST]
Other articles published on Oct 7, 2022
English summary
India EX Cricketer Ajay jadeja gives warning to the Rishabh pant இந்திய அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்படுவார்.. முன்னாள் வீரர் கொடுத்த எச்சரிக்கை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X